ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

ராயல் என்பீல்ட நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான புல்லட் டிரையல்ஸ் மாடலை அந்த நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இதன் விலை மற்றும் முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது சந்தையை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக புதிய மாடல் புல்லட் ஒன்றை நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டிரையல்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள அந்த மோட்டார்சைக்கிள் 350 மற்றும் 500 ஆகிய இரு மாடல்களில் கிடைக்கும்.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் பிளாட்பாரத்தில் வைத்து தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் இது கிளாசிக்கை மாடலின் தாத்பரியங்கள் சிலவற்றைக் கொண்டு ஸ்கிராம்ப்ளர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை குறித்த வீடியோ டீசர் ஒன்றை ராயல் என்பீல்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியான நாள் முதல் இருந்து ராயல் என்பீல்டின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் நேற்று விற்பனைக்காக வெளியிட்டது. மேலும், மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள், தோற்றம் மற்றும் அதன் விலை ஆகியவை குறித்த தகவல்களையும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MOST READ: புல்வாமா தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பிற்காக களமிறங்கும் எம்பிவி வாகனம்...?

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த புதிய புல்லட் டிரையல்ஸ் மோட்டார்சைக்கிள் கிளாசிக்கின் பிளாட்பார்மில் வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால், அதன் தோற்றத்தில் சில மாற்றங்களைப் பெற்று உருவாகியுள்ளது. இதனால், கிளாசிக்கைக் காட்டிலும் சில தனிசிறப்பான வடிவமைப்பைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இதேபோன்று, இதன் சேஸிஸ் மற்றும் எஞ்ஜின் அமைப்பு ஆகியவையும் கிளாசிக்கை ஒத்தவாறு அமைந்துள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

அந்த வகையில், டிரையல்ஸ்-இன் 350 மற்றும் 500 பைக்கில் கிளாசிக்கின் 350 மற்றும் 500 எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, டிரையல்ஸ் 350 மோட்டார் சைக்கிளில் 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 19.8 பிஎச்பி பவரையும், 28என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதேபோன்று, டிரையல்ஸ் 500 வேரியண்டில் 499சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 27.1 பிஎச்பி பவரையும், 41என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 5 ஸ்பீடு டிரான்மிஸ்ஸன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

ஆனால், டிரையல்ஸ் மோட்டார்சைக்கிளை நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ப ராயல் என்பீல்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்த மோட்டார் சைக்கிளின் ஹேண்டில் பார்கள் சற்று மேலோங்கிய நிலையில், வாகன ஓட்டி சீராக பைக்கை இயக்க உதவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பின்புற சீட்டிற்கு பதிலாக, லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கான கேரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இங்கு சீட்டையும் பொருத்திக் கொள்ளலாம். இல்லையெனில் அதை நீக்கிவிட்டு கேரியராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த இரண்டு மோட்டார் சைக்கிளுமே சிவப்பு நிற ஹைலைட்டுகளைக் கொண்டு மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கின்றது. இதேப்போன்று, குரோம் ஃபினிஸ்ட் டெலிஸ்கோபிக் தொழில்நுட்பம் கொண்ட முன்பக்க ஃபோர்க்ஸ், நெசெல்லே ஹெட்லேம்ப், 3டி வடிவிலான ராயல் என்பீல்ட் லோகோ மற்றும் கான்டிராஸ்ட் கலர்களில் இவை கிடைக்கின்றன. மேலும், மோட்டார்சைக்கிள் தண்ணீர் நிறைந்த பகுதியில் செல்லவதற்கு ஏதுவாக இதன் சைலென்சர்கள் மேலோங்கிய நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. இது வெள்ளம் நிறைந்த பகுதி மற்றும் மலை, காடு பகுதிகளில் தடையின்றி செல்ல உதவும்.

MOST READ: சாலையில் சென்றபோது கல்மீது இடித்த கேடிஎம் பைக்கின் எஞ்ஜின்: அடுத்து நடந்தது என்ன... வீடியோ!

ராயல் என்பீல்டின் புதிய புல்லட் டிரையல்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த புத்தம் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை விற்னைக்கு அறிமுகம் செய்த ராயல் என்பீல்ட் நிறுவனம், டிரையல்ஸ் 350 மாடலை ரூ. 1.62 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டிரையல்ஸ் 500 வேரியண்டை ரூ. 2.07 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த மோட்டார் சைக்கிள் மீதான முன்பதிவையும் அதன் டீலர் தொடங்கியுள்ளனர். அதன்படி, ரூ 5 ஆயிரம் செலுத்தி இந்த மோட்டார்சைக்கிளை வாகன ஓட்டிகள் புக் செய்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடிய விரைவில் டெலிவரி செய்ய இருப்பதாக ராயல் என்பீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Bullet Trials 350 And 500 Bookings Open. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X