இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

ராயல் என்பீல்ட நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான புல்லட் டிரையல்ஸ் மாடலை அந்த நிறுவனம் இன்று அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மோட்டார் சைக்கிள் குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

ராயல் என்பீல்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை இன்று அறிமுகம் செய்கிறது. புல்லட் அமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோட்டார்சைக்கிளுக்கு டிரையல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிள் 350 மற்றும் 500 ஆகிய இரு மாடல்களில் ஸ்கிராம்ப்ளர் தோற்றத்தில் களமிறங்க உள்ளது. இந்த புதிய மோட்டார் சைக்கிளை கிளாசிக் 350 மற்றும் 500 பிளாட்பாரத்தில் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

இந்த மோட்டார்சைக்கிள் குறித்த டீசரை ராயல் என்பீல்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பைக் குறித்த மற்ற தகவல்களை வெளியிடாமல் அந்த நிறுவனம் கட்டிக்காத்து வருகின்றது. இந்த நிலையில், டிரையல்ஸ் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்ட் நிறுவனம் இன்று (செவ்வாய்கிழமை) அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

இந்த புதிய புல்லட் டிரையல்ஸ் பைக்குகள் கிளாசிக் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. அதன்படி, இந்த மோட்டார் சைக்கிளில் குரோம் ஃபினிஸ்ட் டெலிஸ்கோபிக் தொழில்நுட்பம் கொண்ட முன்பக்க ஃபோர்க்ஸ், நெசெல்லே ஹெட்லேம்ப், 3டி வடிவிலான ராயல் என்பீல்ட் லோகோ மற்றும் கான்டிராஸ்ட் கலர்களில் இந்த மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

மேலும், இந்த டிரையல்ஸ் மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 19 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும், அதேபோல் பின்பக்கத்தில் 18 இன்ச் பின்பக்க ஸ்போக்ஸ் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும் விதமாக சஸ்பென்ஷன் அமைப்பை ஸ்போர்ட் தரத்திற்கு தயார் படுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, முன்பக்கத்தில் 280mm மற்றும் பின்பக்கத்தில் 240mm கொண்ட டிஸ்க் பிரேக்குகள் ஏபிஎஸ் வசதியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

ராயல் என்பீல்ட் புல்லட்டின் 350 மற்றும் 500 டிரையல்ஸ் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் லக்கேஜ் எடுத்துச் செல்லும்விதமாக சிறிய கேரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உற்பத்தி முடக்கப்பட்ட கான்டினென்டல் ஜிடி 535 மோட்டார்சைக்கிளின் டைல் மின்விளக்கை இந்த புதிய டிரையல்ஸ் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

டிரையல்ஸ் மோட்டார் சைக்கிளின் விலையானது கிளாசிக் மாடல் மோட்டார் சைக்கிள்களை விட 10 ஆயிரம் ரூபாய் அதிகமான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றம் உள்ளிட்ட சில சிறப்பு மாற்றங்களைக் கொண்டிருப்பதால் இதன் பிரீமியம் தொகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனையாகும் கிளாசிக்கின் 350 மாடல் மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் ரூ. 1.53 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் ரூ. 2.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனையாகி வருகின்றது.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

இந்த புல்லட் டிரையல்ஸ் 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்களில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட 346சிசி மற்றும் 499சிசி திறனுடைய எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில், 346சிசி எஞ்ஜினானது 19பிஎச்பி பவரையும், 28என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று 499சிசி திறனுடைய எஞ்ஜினானது 27பிஎச்பி பவரையும் 41என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இன்று அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புத்தம் புதிய புல்லட் டிரையல்ஸ்...?

ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிள் குறித்த பல முக்கியமான தகவல்களை இன்றளவும் கசியவிடாமல் பாதுகாத்து வருகின்றது. அதேபோன்று, இன்று அந்த மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதால், மோட்டார் சைக்கிள்கள் பல முக்கிய தகவல்களை இன்று வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மோட்டார்சைக்கிளின் விற்பனைக்கான முன்பதிவை ராயல்என்பீல்ட் மோட்டார் சைக்கிள் டீலர்கள் தற்போது ஏற்று வருகின்றனர்.

Most Read Articles
English summary
Royal Enfield Bullet Trials 350 And 500 All Set To Be Launched. Read In Tamil.
Story first published: Tuesday, March 26, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X