புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் கிளாசிக் மாடல்களான 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய அக்ஸசெரீஸ்களை விற்பனைக்க அறிமுகம் செய்துள்ளது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் கிளாசிக் ரக மோட்டார்சைக்கிளுக்கான அக்ஸசெரீஸ்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், கிளாசிக் 350 மற்றும் 500 மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கான புதுவித அக்ஸசெரீஸ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ. 600 முதல் தொடங்கும் இந்த அக்ஸசெரீஸ்களின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

ராயல் என்பீல்டு நிறுவனம், கிளாசிக் மாடலில் 350 மற்றும் 500 இருசக்கர வாகனங்களைச் சந்தையில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களும், இந்த நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல்களாக இருந்து வருகின்றன. அண்மையில் இந்த இரண்டு மாடல்களையும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப ராயல் என்பீல்டு நிறுவனம் அப்கிரேட் செய்தது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

அந்த வகையில், கிளாசிக் 350 மாடல் மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டது. ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூ.5,800 கூடுதல் விலையில் ஏபிஎஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று, கிளாசிக் 500 மாடல் மோட்டார்சைக்கிளிலும், புதிதாக ஸ்டீல்த் பிளாக் மற்றும் டெசர்ட் ஸ்டோர்ம் ஆகிய இரண்டு வண்ணங்களில் ஏபிஎஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஸ்டான்டர்டு மாடலைக்காட்டிலும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

இதைத்தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் இந்த மோட்டார்சைக்கிள்களில் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கும் கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக புதிய அக்ஸசெரீஸ்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் இயல்பாக பொருத்தி வரும் ஃபோக்ஸ் வீலுக்கு பதிலாக அலாய் வீலை மாற்றிக்கொள்ளும் விதமாக, ஸ்டைலிஸ்ட் மெஷின்ட் அல்லாய் வீல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை பத்தாயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்படுகிறது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

இதேபோன்று, மின் விளக்கு புரொடெக்ஷன் கிரில், டூரிங் சீட்ஸ், ஹேண்ட் கிரிப், ஹேண்ட் குவார்ட், லக்கேஜ் ரேக், பேனியர் மவுண்டிங் கிட், விண்ட் ஷீல்ட், எஞ்ஜின் பார்ஸ் மற்றும் கிராஷ் குவார்ட் உள்ளிட்ட பல்வேறு அக்ஸசெரீஸ்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய அக்ஸசெரீஸ்களுக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் குறிப்பிட்ட கால வாரண்டியையும் அளிக்கிறது.கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட ஏர்கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

இந்த மோட்டார்சைக்கிளின் முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. இதனுடன், இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. சில்வர், சாம்பல், கிளாசிக் பிளாக், லகூன் புளூ மற்றும் கிளாசிக் செஸ்ட்நட் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கின்றது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 499சிசி ஏர்கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய அக்ஸசெரீஸுடன் உங்க ராயல் என்பீல்டு பைக்கை அலங்கரிக்க தயாராகுங்க...!

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு உள்ளது. இத்துடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு உள்ளது. சாதாரண மாடலைவிட ஏபிஎஸ் மாடலின் பின்சக்கரத்தில் பெரிய டிஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 & 500 Accessory List.Read In Tamil.
Story first published: Saturday, April 20, 2019, 10:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X