ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. புல்லட் 350, 350 இஎஸ் மற்றும் க்ளாசிக் 350 மாடல்களில் மட்டுமே ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கு ரூ.1.53 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூ.5,800 என்ற கூடுதல் விலையில் ஏபிஎஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தவிர்த்து, க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த மோட்டார்சைக்கிளில் 349சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் முன்சக்கரத்தில் 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. இதனுடன், இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இணைந்து செயல்படும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் சில்வர், சாம்பல், கிளாசிக் பிளாக், லகூன் புளூ மற்றும் கிளாசிக் செஸ்ட்நட் ரெட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் மாடல் க்ளாசிக் 350. இந்த நிலையில், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடுதல் மதிப்பு வாய்ந்த மாடலாக மாறி இருக்கிறது. ஏபிஎஸ் மாடல் விலையும் மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை வழக்கம்போல் தொடரும் என்று நம்பலாம்.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ஏபிஎஸ் மாடல் அறிமுகம்!

புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடலானது ஜாவா 42, பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். இந்த மாதம் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரியும் துவங்க இருப்பது இந்த மோட்டார்சைக்கிளுக்கு கடும் சவாலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 ABS launched. Royal Enfield has updated their Classic 350 model with dual-channel ABS in India and is priced at Rs 1.53 lakh, ex-showroom (Delhi). This is a slight hike in prices over the non-ABS version by Rs 5,800.
Story first published: Monday, March 4, 2019, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X