நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் சில முக்கிய விஷயங்களுடன் பிஎஸ்-6 ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் அறிமுகமாக உள்ளது.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. பிரம்மாண்ட தோற்றம், எஞ்சின் சப்தம் ஆகியவை வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருவதுடன் தோதான விலையிலும் கிடைக்கிறது.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தற்போது கார்புரேட்டர் கொண்ட 346 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 20 பிஎஸ் பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

இதே எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படுகிறது. இதில், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஓ2 சென்சார்கள் மற்றும் புதிய கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, மாசு உமிழ்வு பிஎஸ்-6 விதிகளுக்கு நிகராக இருக்கும். இந்த புதிய தொழில்நுட்ப மாறுதலால் பவரை வெளிப்படுத்தும் திறன் சற்றே குறைந்திருக்கும் வாய்ப்புள்ளது.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

இந்த புதிய பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் மாடலில் புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும்.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

அத்துடன், வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அலாய் வீல்களும் இந்த புதிய மாடலில் விருப்பத் தேர்வாக வழங்கப்பட இருக்கிறது. சாதாரணமாக ஸ்போக்ஸ் சக்கரங்கள் கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கும். இதில், ட்யூப் டயரும், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மாடலில் ட்யூப்லெஸ் டயரும் வழங்கப்படும்.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

பிஎஸ்-6 மாடலின் விலை 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் அலாய் வீல்கள் பொருத்தப்பட்ட மாடலின் விலை ரூ.10,000 கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. புதிய மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொம்ட மாடல்களும் வர இருக்கின்றன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலில் முன்சக்கரத்தில் மட்டும் டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!

புதிய தலைமுறை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அடுத்த ஆண்டு மத்தியில் எதிர்பார்க்கப்படுவதால், அதுவரை பழைய மாடலிலேயே பிஎஸ்-6 எஞ்சின்களை வழங்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தனது 500 சிசி மாடல்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கும் ஒரு திட்டத்தை ராயல் என்ஃபீல்டு கையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 to get BS-6 Engine and also coming with new color options, alloy wheels in India very soon.
Story first published: Friday, December 13, 2019, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X