சத்தியமா நம்புங்க இது கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

இளைஞர் ஒருவர் பெரும் பொருட் செலவில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து ரக பைக்குகளுக்கும் இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதற்கு, ராயல் என்பீல்டின் பைக்குகள் பாரம்பரிய மிக்க தோற்றத்தில் இருப்பதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த வாகனத்தின் பவருக்கும் பலர் அடிமையாகி இருக்கின்றனர்.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

இதன்காரணமாகவே, பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாக இது இருக்கின்றது. ஏன் நம்மில் பலரும்கூட இந்த பைக்கிற்கு ரசிகர்களாக இருக்கலாம். அதிலும், இந்த நிறுவனத்தின் கிளாசிக் மாடல் பைக்குகள் அதன் ரசிக பட்டாளம் ஏராளம். அதற்கு அதன் பாரம்பரியமிக்க ஸ்டைலே முக்கிய காரணமாக இருக்கின்றது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

அந்தவகையில், இந்த பைக்கை மிகவும் விரும்பி வாங்கிய இளைஞர் ஒருவர் அவரின் விருப்பத்திற்கேற்ப மாடிஃபை செய்துள்ளார். இந்த மாடிஃபிகேஷனால், இந்த பைக் பாபர் ஸ்டைலில் மிகவும் ரம்மியமான தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

நாட்டின் தலைநகரான டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல மாடிஃபிகேஷன் நிறுவனமான பிட்டூ, தான் இந்த தரமான சம்பவத்தை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ரெட்ரோ ஸ்டைலில் மாற்றியமைக்க அதன் உரிமையாளர் ரூ. 1.40 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

அந்தவகையில், கிளாசிக் 350 பைக்கை முழுமையாக பிரித்து மேய்ந்துள்ள, அந்த மாடிஃபை நிறுவனம், பைக்கின் பல்வேறு பாகங்களை மாற்றியமைத்துள்ளனர். அந்தவகையில், ஹெட்லைட், வீல்கள், பெட்ரோல் டேங்க், சீட் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோவை வேம்ப் வீடியோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

இந்த மாடிஃபிகேஷனில் கிளாசிக் 350 பைக்கின் எந்த ஒரிஜினல் பாகத்தை வைத்துக்கொண்டு, மற்ற பாகங்களை மாற்றியுள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே நமக்கு பல மணி நேரம் பிடிக்கின்றது. ஆனால், பார்த்த உடனே கண்டுபிடிக்கும் வகையில், அதன் முன் பக்க ஹெட்லேம்ப், பாபர் ஸ்டைலிலான பெட்ரோல் டேங்க், ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையிலான சீட், மிக அடர்த்தியான முன், பின் பக்க டயர்கள் மற்றும் அதற்கேற்ப அலாய் வீல்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

இத்துடன் நேர்த்தியான வண்ணக் கலவையும் இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பைக்கின் பெட்ரோல் டேங்கிற்கு மேட் ஃபினிஸிங் கொண்ட கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, இருக்கைக்கு மெரூன் வண்ணத்திலான லெதர் கவர் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், சைலென்சருக்கும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களால் கிளாசிக் 350 பைக் படு கவர்ச்சியான பாபர் ஸ்டைல் பைக்காக மாறியுள்ளது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

இத்தகைய மாற்றங்களால் இந்த கிளாசிக் பைக், ஒரிஜினல் வெர்ஷனைக் காட்டிலும் 192 கிகி, அதிகரித்து காணப்படுகிறது. இந்த முக்கிய காரணங்களாக, அடர்த்தியான டயர்களே மிக முக்கியமாக இருக்கின்றது. மேலும், இந்த பைக்கில், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பெட்ரோல் டேங்கின் பக்கவாட்டு பகுதியில், ஹேண்டில் பாருக்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

இத்துடன், பைக்கின் சொகுசான பயணத்திற்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், பைக்கின் முன்பக்கத்தில் புதிய யுஎஸ்டி போர்க்கும், பின்பக்கத்தில் பழைய பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே ட்வின் கேஸ் சார்ஜட் சாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதில், முன்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஃபோர்க்தான் பைக்கிற்கு ரெட்ரோ லுக் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பைக்கின் ஹேண்டில் பார்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சத்தியமா நம்புங்க இது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் தான்... இத இப்படி மாத்த எவ்ளோ செலவாச்சு தெரியுமா...?

ஆனால், இந்த பைக்கின் எஞ்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், கிளாசிக் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 346சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 19.8 எச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 Gets Custom Based Bobber. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X