ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது 650 ட்வின் பைக்குகளின் பாகங்களை மெக்கானிக் உதவியின்றி மாற்றுவது எப்படி? என்பது குறித்த விளக்கமான ஆலோசனைகளை வீடியோக்களின் மூலம் கூறிவருகிறது.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

ராயல் எண்ட்பீல்டின் அதிகாரப்பூர்வ யூடியுப் சேனலில் வெளியிடப்பட்டு வரும் இந்த வீடியோக்களில் தற்போது 650 ட்வின்ஸ் பைக்குகளின் ஹெட்லைட்டை தனி ஆளாக எவ்வாறு மாற்றுவது? என்பதை படிப்படியாக விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

இதன் மூலம் ராயல் எண்ட்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளை வைத்திருப்போர் பைக்கில் ஹெட்லைட், பின்புற ஹெட்லைட், இண்டிக்கேட்டர் உள்ளிட்டவை பழுதானால் தங்களது கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் மூலமே அவற்றிற்கு தீர்வை கண்டு கொள்ளலாம்.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

இதனால் பைக்கை ராயல் எண்ட்பீல்டு சர்வீஸ் சென்டர்களுக்கு எடுத்து சென்று காசையும் நேரத்தையும் வீணாக்க தேவையில்லை. இந்த ஹெட்லைட்களை மாற்றும் வீடியோ மட்டுமில்லாமல் என்ஜின் உள்ளிட்ட இயந்திர பாகங்களில் ஏற்படும் பழுதுகளை தீர்ப்பதற்கான ஆலோசனை வீடியோக்களையும் அதன் யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

இந்த வீடியோக்களில் பைக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க எந்தெந்த உபகரணங்கள் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன் சிலருக்கு எது ஸ்பேனர்? எது ஸ்க்ரூ ட்ரைவர்? என்பது கூட சில நேரங்களில் குழப்பமாக இருக்கும். இந்த வீடியோக்களில் இதற்கு கூட விளக்கமளித்து செயல்முறையை தொகுத்து வழங்கியுள்ளனர்.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

பைக்கின் ஸ்பார்க் ப்ளக்கை சுத்தம் செய்தவதற்கு, பாகங்களை அட்ஜெஸ்ட் மற்றும் மாற்றுவதற்கு, ப்ரேக் கேபிள்களை அட்ஜெஸ்ட் செய்வதற்கு, ட்ரபிள் ஷூட்டிங்: ஸ்டார்ட்டிங் ட்ரபிள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை அறிய, பைக்கின் சங்கிலியை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் மாற்ற வேண்டும், முன்புற மற்றும் பின்புற சக்கரங்களை கழற்றி மாற்ற, பேட்டரியை பாதுகாப்பாக கழற்ற, க்ளட்ச் கேபிளை அட்ஜெஸ்ட் செய்ய, ஆயில் நிலையை கண்டறிய மற்றும் ஏற்கனவே கூறியதுபோல் ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர் பல்ப்களை கழற்றி மாற்ற என மொத்தம் 11 வீடியோக்கள் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இந்நிறுவனம் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினென்டல் 650 பைக்குகளில் ஹெட்லைட் மற்றும் பெயிண்ட் அமைப்பில் சிறிய அப்டேட் செய்துள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. இன்னும் விற்பனை வராத இப்பைக்குகளின் விலை அதிகரிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. இந்த அப்டேட் செய்யப்பட்ட 650 ட்வின்ஸ் பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தலாம்.

ராயல் எண்ட்பீல்டின் ஹெட்லைட்டை மெக்கானிக்கின் உதவியின்றி மாற்றுவது எப்படி? இந்த வீடியோவை பாருங்க புரியும்

இந்த ட்வின் பைக்குகளை பொறுத்த வரையில் இரண்டும் ஒரே ஃப்ரேம், ப்ரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளை தான் பெற்றுள்ளன. இரண்டிலும் ஒரே 648சிசி இணையான இரட்டை சிலிண்டர் அமைப்புகளை கொண்ட ஃப்யூல் இன்ஜெக்டட் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஆறு-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 47 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனுடையதாகும்.

Most Read Articles
English summary
Royal Enfield’s DIY Basic Video Instructions For 650 Twins: Covers Starting Trouble & More
Story first published: Friday, November 15, 2019, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X