சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

சென்னையைக் கோட்டையாக் கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம், அந்நகரத்தின் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சென்னை வாசிகளின் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகின்றது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

தண்ணீர்... சென்னையின் மிகப் பெரிய பிரச்னைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இது சென்னை மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் தலை விரித்து ஆடத் தொடங்கியுள்ளது. ஆனால், சென்னையில் சற்று அதிகமான விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் வாகனங்களை சுத்தம் செய்ய டிரை வாஷ் எனும் முறையைக் கையாள இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அந்த நிறுவனம் சென்னையை மையமாக்கக் கொண்டு இயங்குவதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்நிறுவனம், சென்னையில் இருப்பதால், சென்னை வாசிகளின் தண்ணீர் கஷ்டம் குறித்து அறிந்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போதைய தண்ணீர் பிரச்னையானது, தலை நகர் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகின்றது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

இந்த டிரை வாஷ் முறையை ராயல் என்பீல்டு நிறுவனம், சென்னை முழுவதிலும் இயங்கி வரும், அதன் 20க்கும் மேற்பட்ட சர்வீஸ் மையங்களில் பயன்படுத்த இருக்கின்றது. இந்த முயற்சியால் மாதம் ஒன்றிற்கு பயன்படுத்தப்படும் 18 லட்சம் லிட்டர் வீணடிப்பது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் தண்ணீர் தேவையானது மாதத்திற்கு 800 மில்லியன் லிட்டராக இருக்கின்றது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

ஆனால், சென்னை குடிநீர் வாரியத்தால் வெறும் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது விநியோகிக்க முடிகின்றது. ஆகையால், ராயல் என்பீல்டு கையிலெடுத்திருக்கும் இந்த முயற்சியினால், கணிசமான அளவு நீர் சேமிக்கப்படுவதுடன், ஓர் நாளுக்கு தேவையான நீர் தேவை பூர்த்தி செய்ய உதவும் வகையில் அது அமைந்துள்ளது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

ராயல் என்பீல்டின் இந்த முயற்சியானது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இதன்மூலம் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகளை உடனடி நிவர்த்தி செய்வதுமட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடும் நிறுவனம் என்ற நற்பெயரை தன் வசம் குவித்துள்ளது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

இந்த புதிய முறை குறித்து ராயல் என்பீல்டின் தலைவர் ஷஜி கோஷி கூறியதாவது, "ராயல் என்பீல்டின் இந்த முன்மாதிரியான முயற்சியானது, சந்தையில் நீடித்து நிலைக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்தான், காகிதம் இல்லாத சேவை மற்றும் டிரை வாஷ் சிஸ்டம் உள்ளிட்டைக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதைய சென்னையின் சூழ்நிலையே எங்களை இவ்வாறு செய்ய தூண்டியது" என்றார்.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

தொடர்ந்து பேசிய அவர், "சென்னை ராயல் என்பீல்டின் கோட்டையாகும். இதன்காரணமாகவே, சென்னையின் இந்த துயரத்தில் எங்கள் பங்காக இந்த முன்மாதிரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். டிரை வாஷ் முறையானது அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இதற்கு தண்ணீர் தேவைப்படாது. அதேசமயம், தண்ணீர் வாஷைக் காட்டிலும் சிறப்பான பொலிவை, டிரை வாஷ் வாகனங்களும் வழங்கும். நீர் பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக சென்னையில் இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதையே எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் கையாள திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனம் மிகவும் பழைமை வாய்ந்த, பாரம்பரியமிக்க மோட்டார்சைக்கிள்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும். மேலும், இது இந்திய இருசக்கர வாகன சந்தையில், மிட்-சைஸ்ட் ரகத்திலான மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது. இதனால், இது உலகளாவிய அளவில் நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் சந்தையில் ஒரு முக்கிய வீரராக மாறி உள்ளது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

மேலும், இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த நிறுவனம், அதன் தயாரிப்புகளை அவ்வப்போது மேம்படுத்த அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனம் கடைசியாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டர் ஜிடி 650 ஆகிய இரு ட்வின் மாடல் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு களமிறக்கியது.

சென்னையின் தண்ணீர் பிரச்னைக்காக ராயல் என்பீல்டு கையிலெடுத்த அதிரடி திட்டம்... சிறப்பு தகவல்!

இதைத்தொடர்ந்து, கிளாசிக், தண்டர்பேர்டு, ஹிமாலயன் 410 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை அப்கிரேட் செய்யும் பணியலில் ஈடுபட்டு வருகின்றது. இவற்றை கூடிய விரைவில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அந்நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Royal Enfield Adopts Dry Wash System — Saves Chennai 18 Lakh Litres Of Water. Read In Tamil.
Story first published: Thursday, June 27, 2019, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X