இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிய நாடு ஒன்றில் ராயல் என்பீல்டு நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக தலைநகர் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனம் உலகம் முழுக்க தனது விற்பனையை விரிவாக்கம் செய்து வருகிறது. குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது ராயல் என்பீல்டு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

ஏனெனில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 20 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருப்பதே இதற்கு காரணம். இந்த சூழலில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தென் கொரியாவில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக முக்கியமான விரிவாக்கமாக இது கருதப்படுகிறது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

தென் கொரியாவில் வின்டேஜ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ராயல் என்பீல்டு கை கோர்த்துள்ளது. தென் கொரியாவிற்கான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பார்ட்னர் மற்றும் வினியோகஸ்தராக வின்டேஜ் மோட்டார்ஸ் செயல்படும். இதனிடையே தென் கொரிய தலைநகர் சியோலில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக சேல்ஸ், சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைக்கு 3 மாடல்களை மட்டுமே தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், புல்லட் 500 மாடலுக்கு 5,500,000 வான்கள் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வான் என்பது தென் கொரிய கரன்ஸி ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 3.35 லட்ச ரூபாய். அதே சமயம் கிளாசிக் 500 ஸ்டாண்டர்டு மோட்டார் சைக்கிள் மாடலுக்கு 5,950,000 வான்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 3.63 லட்ச ரூபாய். கிளாசிக் 500 குரோம் மாடலின் விலை 6,200,000 வான்கள். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3.78 லட்சம்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

அதே நேரத்தில் அட்வென்சர் மோட்டார் சைக்கிளான ஹிமாலயனுக்கு 4,950,000 வான்கள் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 3.02 லட்ச ரூபாய். இந்த மோட்டார் சைக்கிள்கள் தவிர ரைடிங் கியர், ஆடைகள் மற்றும் ஆக்ஸஸரிகள் ஆகியவையும் சியோல் நகரில் உள்ள ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் கிடைக்கும்.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

ஆனால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 21.3 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். ஜாவாவின் வருகையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ராயல் என்பீல்டு காலடி எடுத்து வைத்த புதிய நாடு இதுதான்... விற்பனை விரிவாக்கம் தீவிரம்...

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் நேரடி போட்டியாளரான ஜாவா, வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தது. தற்போதைய நிலையில் ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Enters South Korea Motorcycle Market. Read in Tamil
Story first published: Saturday, April 20, 2019, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X