ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

ராயல் என்ஃபீல்டு ஹீமாலயன் 650 சிசி மோட்டார்சைக்கிளின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

சாகச பைக் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, இமயமலை சாகசப் பயணம் செல்வோரின் நம்பர்-1 சாய்ஸாக இருந்து வருகிறது. கரடுமுரடான சாலைகளிலும் எளிதாக செல்வதற்கு ஏற்ற தகவமைப்புகளுடன் அட்வென்ச்சர் டூரர் ரக மாடலாக உருவாக்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

சாகசப் பயணங்ளுக்கு ஏற்ற வடிவமைப்பு, ஆஃப்ரோடு டயர்கள், கேரியர் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை கூறிக் கொண்டே செல்லலாம். இந்த பைக்கில் தற்போது 411 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 எச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

இந்த நிலையில், சாகச பைக் பிரியர்களின் எதிர்பார்த்தை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் திறன் வாய்ந்த 650 சிசி ஹிமாலயன் மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இந்த மாடலுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

எனவே, ராயல் என்ஃபீல்டு ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 650 சிசி எஞ்சின்தான் புதிய ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிளும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் 47 எச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணையுடன் வரும் வாய்ப்புள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

புதிய ஹிமாலயன் 650 சிசி மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் மோட்டார்சைக்கிள்களை சோதனை ஓட்டம் செய்வதில் ராயல் என்ஃபீல்டு தீவிரமாக இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 650 மோட்டார்சைக்கிள் அறிமுக விபரம்!

எனவே, புதிய ஹிமாலயன் 650 மாடலின் அறிமுகத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்காலிகமாக தள்ளிபோட்டுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, வரும் 2021ம் ஆண்டுதான் ஹிமாலயன் 650 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
According to reports, Royal Enfield Himalayan 650 adventure motorcycle is expected to launch in India in 2021.
Story first published: Monday, September 23, 2019, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X