இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களையும், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

650 ட்வின்ஸ் என அழைக்கப்படும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் அவை மிக சிறப்பான விற்பனையை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 மாடல்களிலும், 648 சிசி, ட்வின்-சிலிண்டர் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனை இந்த இன்ஜின் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களில் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இதன்மூலம் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வந்த முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் என்ற பெருமையை 650 ட்வின்ஸ் பெற்றுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்த வரை முன் பகுதியில் ட்வின்-பிஸ்டன் பைபர் காலிபர்ஸ் 320 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

அதே சமயம் பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தையும் ராயல் என்பீல்டு நிறுவனம் கொடுக்கிறது. இரண்டு மாடல்களிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

முன்பகுதியில் 41 மிமீ டெலஸ்கோபிக் சஸ்பென்ஸன் உடனும், பின் பகுதியில் ட்யூயல்-சஸ்பென்ஸன் உடனும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் வருகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி 650 ட்வின்ஸ் மாடல்களின் விற்பனை மிக சிறப்பாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,014 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஒரே மாதத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் 314 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதனிடையே டிசைன் என்ற அடிப்படையில் பார்த்தால் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் வேறுபடுகின்றன.

இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா?

இதில், இன்டர்செப்டார் 650 எளிமையான டிசைன் தீமை பெற்றுள்ளது. இதன் ஹேண்டில்பார் சிங்கிள் பீஸ் யூனிட் ஆகும். இன்டர்செப்டார் 650 மாடலின் எரிபொருள் டேங்க் டிசைன் மிகவும் நேர்த்தியாக உள்ளது. பின்பகுதியில் உள்ள டெயில் லேம்ப்பிற்கு வழக்கமான பல்புதான் வழங்கப்படுகிறது.

18-இன்ச் வீல்கள் மூலம் 650 ட்வின்ஸ் மாடல்கள் ஓடுகின்றன. முன்பகுதியில் 100/90 செக்ஸன் டயரும், பின் பகுதியில் 130/70 செக்ஸன் டயரும் வழங்கப்படுகிறது. அனைத்து விதமான ரைடிங் கண்டிஷன்களிலும் பைரெலி டயர்கள் மிக சிறப்பான க்ரிப்பை வழங்குகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650, Continental GT 650 Monthly Sales Crossed 2K Mark For The First Time. Read in Tamil
Story first published: Wednesday, May 22, 2019, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X