யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

650 ட்வின்ஸ் என அழைக்கப்படும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இந்திய மார்க்கெட்டில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது தங்களது செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களாக இவை உருவெடுத்துள்ளன.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 5 மாதங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே அவற்றின் விற்பனை எண்ணிக்கை 5,168 யூனிட்களை தொட்டுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நவம்பர் மாதம் முதல், ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை மாதந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

இதன்படி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 325 யூனிட்களாக இருந்த ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை அடுத்த வந்த டிசம்பர் மாதத்தில் 629 யூனிட்களாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,069 யூனிட்களாகவும், அதன்பின் வந்த பிப்ரவரி மாதத்தில் 1,445 யூனிட்களாகவும் உயர்ந்தது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

இதன்பின் கடந்த மார்ச் மாதத்தில், ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை இன்னும் அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் 1,700 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆக மொத்தத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் கடந்த மார்ச் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை 5,168.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

விற்பனை என்ற அடிப்படையில் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் சந்தித்துள்ள பிரம்மாண்ட வெற்றியானது, இந்த விலை ரேஞ்ச் அல்லது செக்மெண்ட்டில் வேறு எந்த மோட்டார் சைக்கிளுக்கும் கிடைக்காத ஒன்றாகும். ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களுக்கு, இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவுகிறது. இதனால் அவற்றுக்கான காத்திருப்பு காலம் தற்போது 4-6 மாதங்களாக உள்ளது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 2,500 யூனிட் 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் நீண்ட வெயிட்டிங் பீரியட் காரணமாக, 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 4,000-5,000 யூனிட்களாக அதிகரிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

இதனிடையே இந்தியாவின் 500-800 சிசி செக்மெண்ட்டில், இரு சக்கர வாகனங்களின் விற்பனை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் கடந்த 2017-18 கால கட்டத்தில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 3,585 மட்டுமே. ஆனால் இந்த எண்ணிக்கையானது 2018-19 கால கட்டத்தில், 8,264 யூனிட்களாக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 130 சதவீத வளர்ச்சி.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

இதற்கு ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்கள் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

ஏனெனில் கடந்த 2017-18 கால கட்டத்தில் மொத்தம் 2,043 யூனிட் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையானது 2018-19 கால கட்டத்தில், வெறும் 1,513 யூனிட்களாக சரிந்துள்ளது. ஆனால் ஏற்றுமதி என்ற விஷயத்தில், ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை ஹார்லி டேவிட்சன் மாடல்கள் வீழ்த்தியுள்ளன.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த ஹார்லி டேவிட்சன் மாடல்களின் எண்ணிக்கை 5,395. ஆனால் ஏற்றுமதியான ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 4,442 மட்டுமே. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான விலையும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்

இந்த செக்மெண்ட்டில் விற்பனையாகும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் விலை 5 லட்ச ரூபாய்க்கும் மேல்தான் உள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் ஆரம்ப விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களில், 648 சிசி, பேரலல் ட்வின், ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650, Continental GT 650 Reaches 5k Sales Milestone In India. Read in Tamil
Story first published: Tuesday, April 23, 2019, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X