விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

கடந்த மார்ச் மாதத்திற்கான ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள் மாடல்களும் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் 650 டிவின்ஸ் என அழைக்கப்படுகின்றன.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி, ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மலிவான ட்வின் சிலிண்டர் இன்ஜின் மோட்டார் சைக்கிள்கள் என்ற பெருமை ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவற்றையே சாரும்.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 47 எச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இவ்விரு மோட்டார் சைக்கிள்களிலும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 174 மிமீ.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

ஆனால் எடை விஷயத்தில் இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் வேறுபடுகின்றன. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளின் எடை 202 கிலோ. ஆனால் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிளின் எடை 198 கிலோ மட்டுமே. அதே போல் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் எரிபொருள் டேங்க் கொள்ளளவும் வேறுபடுகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 13.70 லிட்டர்கள். ஆனால் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 12.50 லிட்டர்கள் மட்டும்தான். இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

இதன் மூலம் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மாதந்தோறும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை தெரியவந்துள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

இதன்படி கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,700 ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய மிடில் வெயிட் தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் மோட்டார் சைக்கிள்களின் புரட்சிகரமான விலைக்குதான் சென்று சேர வேண்டும்.

விற்பனையில் கெத்து காட்டும் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ்!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.2.50 லட்சம் முதலும், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.2.65 லட்சம் முதலும் தொடங்குகின்றன. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 And Continental GT 650 Sales Report For March 2019. Read in Tamil
Story first published: Friday, April 19, 2019, 21:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X