அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

இதுவரை மாடிஃபிகேஷன் உலகம் காண வகையிலான புதிய ஸ்டைலை ராயல் இன்டர்செப்டார் 650 பைக் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குபவர்கள் மத்தியில் பிரபலமான பைக்காக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள் உள்ளன. இவை, திரைப்பட கதாநயகர்களைப் போல தங்களின் உருவத்தை மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற தேர்வாக இருக்கின்றது.

அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் தற்போது காட்டு விலங்கைப் போன்ற புதிய உருமாற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

இதுபோன்ற பல்வேறு மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள்குறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் குழு வெளியிட்டிருந்தது. ஆனால், அவையனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போதைய இன்டர்செப்டார் புத்தம் புதிய மாடிஃபிகேஷனைப் பெற்றிருக்கின்றது.

இந்த பைக்கிற்கு, அதனை மாடிஃபை செய்த நிறுவனம் நீல்கந்தா என்ற பெயரை வைத்துள்ளது. இத்தகைய மாடிஃபிகேஷனிற்கு சுமார் 16 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

தற்போது, யூனியன் பிரதேசமான கோவாவில் 2019ம் ஆண்டிற்கான ராயல் என்பீல்டு ரைடர் மேனியா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில்தான் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்டர்செப்டார் நீல்கந்தா பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய அவதாரத்தால் இன்டார்செப்டார் 650 தற்போது பேக்கர் ரக பைக்காக மாறியுள்ளது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

இந்த புதிய தோற்றத்திற்கான பணியை டிஎன்டி என்ற டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் இந்த புதிய அவதாரத்திற்காக பல்வேறு கடுமையான சூழலைச் சந்தித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

அந்தவகையில், புதிய அவதாரத்திற்காக தனது உண்மை தன்மை அனைத்தையும் இழந்த இன்டர்செப்டார் 650, முழுவதுமாக ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களால் அலங்காரத்தைப் பெற்றிருக்கின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

எனவே, இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மாடல் என்பதைக் காட்டிலும் வேறேதோ வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில் துளியளவும் ராயல் என்பீல்டின் தயாரிப்பு என்பதனை வெளிப்படுத்தாத வகையிலான பல்வேறு மாற்றங்களை அது பெற்றிருக்கின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

முக்கிய பைக்கின் முன்பக்கத்தில் முக்கோன வடிவில் பொருத்தப்பட்டுள்ளது கவுல், தனி சிறப்பான தோற்றத்தை வழங்குகின்றது. இந்த கவுலில்தான் பைக்கின் ஹெட்லேம்ப் நிறுவப்பட்டுள்ளது. மேலும், முன்பக்க சக்கரத்தின் மட் குவார்டாகவும் பயன்படுகின்றது.

தொடர்ந்து, பைக்கின் பக்கவாட்டு மற்றும் பெட்ரோல் டேங்க் என அனைத்து பகுதிகளிலும் ஸ்பெஷல் தோற்றத்திலான குவார்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

அவை பிரகாசமான நீல நிறத்தில் காட்சியளிக்கின்றன. அதிலும், பின்பக்க டயரை மூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள குவார்ட் கூடுதல் கவர்ச்சியாக காட்சியளிக்கின்றது. இதனை, பின்பக்கதில் இருந்து பார்க்கும்போது அன்ன பறவை ஒன்று தரையில் அமர்ந்திருப்பதைப் போன்ற பிம்பத்தை நமக்கு வழங்குகின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

இதுமட்டுமின்றி, ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் காணப்படுவதைப் போன்று சற்று உயரமான ஹேண்டில் பார் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட 23 இன்ச் அலாய் வீல் உள்ளிட்டவையும் நீல் கந்தா பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, பெட்ரோல் டேங்கில் கூடுதலாக குரோம் பூச்சிலான பேட்ஜ், ஹேண்ட் கிரிப், கால்கள் வைக்கும் பகுதி, இருக்கை உள்ளிட்ட அனைத்தும் ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களாகவே காணப்படுகின்றன.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

மேற்கூறியதைப் போன்று பல்வேறு மாற்றங்களைப் பெற்ற இந்த பைக்கில் எஞ்ஜின் மட்டும் உண்மைத் தன்மை மாற்றப்படாமல் அப்படியேப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அதன் உடற்வாகும் மாற்றப்படாமல் அப்படியே காட்சியளிக்கின்றது.

அன்ன பறவையாக மாறிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650... புகைப்படங்கள் உள்ளே..!

அந்தவகையில், இன்டரெசப்டார் 650 பைக்கில் 647சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டட் எஞ்ஜின் காணப்படுகின்றது. இது ஏர் கூல்ட், பேரல்லல் ட்வின் சிலிண்டர் அம்சத்தைக் கொண்டதாகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதில், டிஎன்டி நிறுவனம் ஏதேனும் மாற்றத்தைச் செய்துள்ளதா என்ற தகவல் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 Gets Modify By TNT Motorcycle. Read In Tamil.
Story first published: Monday, December 9, 2019, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X