வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய அறிவிப்பால், அதன் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்த தகவை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய 650 ட்வின் மாடலான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்குமான முன்பதிவினை டீலர்கள்மூலம் தொடங்கப்பட்டது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் கஃபே ரேஸர் ஸ்டைலிலும், இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் பழைய க்ரூஸர் ஸ்டைலிலும் இருந்ததால் இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், மலிவான விலையில் ட்வின் சிலிண்டர்களுடன் இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள் என்பதால் இந்த ட்வின் மாடல் மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் அமோக கிடைத்து வருகிறது. மேலும், தற்போது வரை இந்த மோட்டார்சைக்கிள்களுக்கான மவுசு குறையாமல் புக்கிங் நீடித்து வருகிறது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ஆனால், சமீபகாலமா இந்த ட்வின் மாடல் மோட்டார்சைக்கிளை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக டெலிவரி செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து, மோட்டார்சைக்கிளினை டெலிவரி செய்ய டீலர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இதுகுறித்து சென்னையில் உள்ள ராயல் என்பீல்டு டீலர் ஷோரூமினை, நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு தொடர்புகொண்டு பேசியபோது, அப்போது இந்த கால தாமதத்தினை உறுதிபடுத்தும் விதமாக அவர்கள், "ட்வின் மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்ய நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும்" என தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல்என்பீல்டு நிறுவனத்தின் இந்த கால தாமதத்தால் ட்வின் மோட்டார்சைக்கிளின் மீதான எதிர்பார்ப்புகள், தற்போது வெறுப்பாக மாறி வருவதாக வாடிக்கையாளர்கள் சிலர் கவலைத் தெரிவிக்கின்றனர்.

மேலும், ராயல் என்பீல்டின் இந்த இரண்டு மாடல்களுக்குமே தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு மாடல்களுக்குமான கால தாமதம், அதன் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டின் இந்த கால தாமத்திற்கு, அதன் ஊழியர்கள் போராட்டமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்காலிக ஊழியர்களின் இந்த போராட்டத்தால், உற்பத்தி குறைவு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ராயல் என்பீல்டு நிறுவனம் சந்தித்து வருகிறது. இதைத்தொடர்ந்தே, தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்னையும் அதற்கு தலைவலியாக மாறி வருகிறது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47பிஎச்பி பவர் மற்றும் 52என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...?

இன்டர்செப்டார் 650 ரூ. 2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 ரூ. 2.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

via: zigwheels.com

Most Read Articles
English summary
Royal Enfield Interceptor 650 Continental GT 650 Waiting Periods Get Longer. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X