ஜாவாவுக்கு போட்டியாக களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 ஏபிஎஸ் மாடலை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. என்ன ஸ்பெஷல் இருக்குனு, இந்த பதிவில் பார்ப்போம்.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு போட்டியாக ஜாவா பைக் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இரண்டு பைக் நிறுவனங்களும் பாரம்பரியமிக்க மாடல்களைக் கொண்டிருப்பதால் இவற்றிற்கிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

பாரம்பரிய ரக பைக்குகளின் விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாக கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு, ஜாவாவின் வருகை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம்.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

ஏனென்றால் இந்தியர்கள் பழைமையான பாரம்பரியமிக்க மாடல் வாகனங்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதன்காரணமாகவே சில வருடங்களாகவே ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பைக் சந்தையில் தனது சாம்ராஜ்யத்தை கடுமையாக நிலைநாட்டி வருகின்றது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

இதனை தக்கவைத்துக்கொள்ள, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துவருகிறது. அந்தவகையில், தனது இரண்டு புதிய அப்கிரேட் செய்யப்பட்ட மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தொடர்ந்து, பூஜ்யம் டவுண் பேமண்டில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

மேலும், தனது புதிய தயாரிப்புகளை அதிநவீன முறையில் கட்டமைத்து அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி, அப்கமிங் மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

அதன்படி, கிளாசிக் ரெட்டிச் 350 மாடலின் அனைத்து ரகங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்னும் இரண்டு சக்கரங்களுக்கான டியூவல் சேனல் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டது, அதன் வாடிக்கையாளர்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றது.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

இதைப்போலவே, புல்லட் 500 ஏபிஎஸ் மாடலை கடந்த 10ம் தேதியன்று 1 லட்சத்து 86 ஆயிரத்து 961 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மேலும், இந்த ஏபிஎஸ் வசதியில்லாத மற்றொரு வேரியண்ட் மாடல் ரூ.14 ஆயிரம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஜாவாவுக்கு போட்டியாக புதிய வசதியுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்ட்... என்ன ஸ்பெஷல் தெரிஞ்சுக்கணுமா?

இந்நிலையில், தற்போது புல்லட் 350 மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கட்டமைக்கப்பட்ட மாடலை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வருகின்ற பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுபோன்ற நவீன வசதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ராயல் என்ஃபீல்ட்டின் சந்தையை தக்க வைத்துக்கொள்ளும் செயலாகவே கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal enfield Introduce Bullet 350 ABS Model On Next Month. Read in Tamil
Story first published: Tuesday, January 22, 2019, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X