ரூ. 1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான கிளாசிக் 500 மாடலை சிறப்பிக்கும் விதமான முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கு வருகின்றது ராயல் என்பீல்டு நிறுவனம். இது, பாரம்பரியமிக்க பைக் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகின்றது. மேலும், இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியா மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

அந்தவகையில், இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களாக கிளாசிக், புல்லட் மற்றும் தண்டர்பேர்டு உள்ளிட்ட மாடல்கள் இருக்கின்றன.

அதிலும், அதிகம் விற்பனை மற்றும் வரவேற்பைப் பெறும் மாடலாக கிளாசிக் இருக்கின்றது. ஆகையால், இதனை சிறப்பிக்கும் விதமாக, கிளாசிக் 500 பைக்கின் ஸ்கேல் மாடலை அந்நிறுவனம் விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளது.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

1:12 என்ற அளவில் இருக்கும் இந்த மாடல் சிறுவர்கள் விளையாடும் பொம்மை வாகனத்தைப் போன்று இருக்கும். இதற்கு விலை ரூ. 1,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், ராயல் என்பீல்டு பைக் விரும்பிகள், அதன் பைக்குகளை மட்டுமின்றி ஸ்கேல் மாடலையும் இனி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

இந்த ஸ்கேல் மாடல்கள் அனைத்தும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. எனவே, கிளாசிக் பைக்கின் பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான கலர், மாதிரி, அளவு உள்ளிட்டவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனம், பல மாடல் பைக்குகளை தயாரித்து வந்தாலும், கிளாசிக் 500 மாடலை சிறப்பிக்கும் விதமாக, அதன் ஸ்கேல் மாடலை அறிமுகம் செய்வதற்கு, அந்த பைக்கிற்கு நிலவி வரும் வரவேற்பும், விற்பனை விகிதமுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

ஆனால், இந்த சூழல் அப்படியே தற்போது தலைகீழாக மாறியுள்ளது. நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கியது முதல் நிலவி வரும் மந்த நிலை காரணமாக இந்திய வாகனத்துறை கடும் மோசமான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றது.

இதில், ராயல் என்பீல்டு நிறுவனமும் தப்பிக்கவில்லை. இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக விளங்கிய கிளாசிக், அண்மைக் காலமாக கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

இதற்கு, பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதிக ஜிஎஸ்டி, பெட்ரோல் விலையுயர்வு, பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்டவையே முக்கிய காரணமாக இருக்கின்றன.

இருப்பினும், ராயல் என்பீல்டு நிறுவனம், இந்த பைக்கை பெருமிதம் செய்யும் விதமாக அதன் ஸ்கேல் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ரூ.1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

இதன் உருவம், சற்று உற்று நோக்கினால் மட்டுமே பொம்மை வாகனத்தைப் போன்று காட்சியளிக்கின்றது. மாறாக, சாதாரணமாக பார்க்கும்போது மாயாஜாலத்தால் சிறிதாக்கப்பட்ட கிளாசிக் பைக்கைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆகையால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பற்றிய இந்த தகவல் உங்களுக்கு சுவாரஸ்யத்தை அளித்திருக்கலாம். இதேபோல் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவை சேர்ந்த புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் மின்சார வாகனங்களின் புரட்சி தொடங்கி விட்டது. எதிர்கால உலகை மின்சார வாகனங்கள்தான் ஆளப்போகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, மிகவும் பிரபலமான ஒரு சில முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை தற்போதே சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டும் ஒன்று. இந்தியாவில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். இந்த சூழலில் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றி அசத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்களைதான் இனி நாம் பார்க்க போகிறோம்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

லிஜூ வைத்யன் என்பவர் பேஸ்புக்கில் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் எப்படி இயங்குகிறது என்பதை இந்த வீடியோக்கள் நமக்கு காட்டுகின்றன. ஹவுண்ட் எலெக்ட்ரிக் எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் ரெகுலர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக மாற்றியுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

புதிய எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாகவே, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலை, ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்காக மாற்றியுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

வழக்கமான ஐசி இன்ஜின் (Internal Combustion Engine - ICE) வாகனங்களை காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் 30-40 சதவீதம் வரை விலை உயர்ந்தவை என ஹவுண்ட் எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி செலவு மற்றும் எலெக்ட்ரிக் பாகங்களின் அதிகப்படியான விலை ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் வழக்கமான வாகனத்தை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற சரியாக எவ்வளவு செலவாகும்? என்பது போன்ற தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. ஒரு கிட் மூலமாக வழக்கமான மோட்டார்சைக்கிளை எலெக்ட்ரிக் மாடலாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு அறிந்த மெக்கானிக்குகள் மூலம் இந்த கிட்டை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

இந்த கிட்டை இன்ஸ்டால் செய்வதற்கு சேஸிஸில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய வேண்டியதில்லை. அத்துடன் மோட்டார்சைக்கிள்களை பற்றி நன்கு தெரிந்த ரெகுலர் மெக்கானிக்குகளால், இந்த ஹார்ட்வேரை பொருத்த முடியும். அதே சமயம் பேட்டரிகளை இணைக்கவும், அதனை இயங்க வைக்கவும் எலெக்ட்ரீசியன் ஒருவர் தேவைப்படுவார்.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

ஆனால் இந்த தயாரிப்பு இன்னும் உற்பத்திக்கு தயாராகவில்லை. அத்துடன் ஆர்டிஓ-வாலும் இது சோதித்து பார்க்கப்படவில்லை. எனவே இந்த கிட்களுக்கு இன்னும் ஆர்டிஓ சான்றும் இல்லை. ஹவுண்ட் எலெக்ட்ரிக் உருவாக்கியுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக் லித்தியம் அயான் பேட்டரியை பெற்றுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்காக மாற்றம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 350... உருவாக்கியது யார் தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் மற்றும் இதன் பவர் எவ்வளவு? என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை.

Most Read Articles
English summary
Royal Enfield Launched Classic 500 Scale Model. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X