டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

ஜாவா நிறுவனத்தால் ஏற்பட்ட விற்பனை சரிவின் காரணமாக குறைந்த வட்டியுடன் ஜீரோ டவுன் பேமண்டில் பைக்குகளை விற்பனை செய்யவதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்ற ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவிற்கு காரணம் என்ன என இந்த செய்தியில் இனி பார்க்கலாம்.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் மிகவும் பிரபலம். ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு, சமீப காலமாக போட்டி அதிகரித்து வருகிறது. ஜாவா, கேடிஎம், ஹோண்டா போன்ற முன்னனி நிறுவனங்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடும் போட்டியாக அமைந்தது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

அதிலும் குறிப்பாக ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு முன்பதிவு முடிவடைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. ஜாவா மீண்டும் அறிமுகமானது முதலே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா வரிசையாக பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களும் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி போட்டி இல்லை என்பதால்தான்,மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தால் முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் எதிர்த்து நிற்பது ஜாவா எனும்போது போட்டி கடுமையாகதான் இருந்தது. எனவேதான் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

குறிப்பாக ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளும், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன. இதனால் கிளாசிக் 350 பைக்கின் விற்பனை வெகுவாக சரிந்தது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் மொத்தம் 56,026 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் 65,367 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை பின்னர் 56,026ஆக சரிந்தது. விற்பனையில் இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

ஜாவா நிறுவனத்தால் விற்பனையில் தொடர் சரிவை சந்தித்த ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது குறைந்த வட்டியுடன் ஜீரோ டவுன் பேமண்டில் பைக்குகளை விற்பனை செய்யவதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

டவுன் பேமண்ட் இல்லாமல் பைக்: அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்

இதன்மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.2490 விகிதம் மாத தவணையாக டவுன் பேமண்ட் இல்லாமல் ராயல் என்பீல்டு பைக்குகளை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த செய்தி ராயல் என்பீல்டு ரசிகர்கள் இடையே பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield Motorcycles At Zero Down Payment: Read in Tamil
Story first published: Tuesday, January 15, 2019, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X