அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 தவிர எஞ்சிய அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வழங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸை வழங்கினாலே போதுமானது.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

அதே சமயம் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் சிபிஎஸ் கட்டாயம். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி பிறப்பிக்கப்பட்ட இந்த அதிரடி உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதலே அமலுக்கு வந்து விட்டன. எனவே இதற்கு இந்த உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனைத்து வாகன நிறுவனங்களும் ஏபிஎஸ், சிபிஎஸ்ஸை வழங்கியுள்ளன.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

ராயல் என்பீல்டு நிறுவனத்தை பொறுத்தவரை, புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மற்றும் 350 இஎஸ் (350 ES) ஆகிய இரண்டு மாடல்களில் மட்டும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் ராயல் என்பீல்டு லைன் அப்பில் உள்ள எஞ்சிய அனைத்து மாடல்களும் ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டு விட்டன.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

எனவே ராயல் என்பீல்டு புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் ஆகிய மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் தற்போது ராயல் என்பீல்டு லைன் அப்பில் உள்ள அனைத்து மாடல்களும் ஏபிஎஸ் வசதியை பெற்று விட்டன. ஆனால் ராயல் என்பீல்டு புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் ஆகிய மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

ராயல் என்பீல்டு லைன் அப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸை பெற்ற 2 மாடல்கள் இவை மட்டும்தான். எஞ்சிய அனைத்து மாடல்களும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை பெற்றுள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

அதாவது ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அதே சமயம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள ராயல் என்பீல்டு புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ.4,500 மற்றும் ரூ.1,500 என்ற வீதத்தில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், அப்டேட் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் விரிவான விலை பட்டியலை ராயல் என்பீல்டு வெளியிட்டுள்ளது.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

இதன்படி ராயல் என்பீல்டு புல்லட் 350 மோட்டார் சைக்கிளின் புதிய விலை ரூ.1.21 லட்சம். அதே சமயம் புல்லட் 350 இஎஸ் மோட்டார் சைக்கிள் புதிய விலை ரூ.1.35 லட்சம். இதன் மூலம் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மலிவான ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களாக இவை தொடர்கின்றன. அதே சமயம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலின் விலை ரூ.1.53-1.63 லட்சம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

தண்டர்பேர்டு 350 மாடலின் விலை 1.56 லட்சம். தண்டர்பேர்டு 350எக்ஸ் மாடலின் விலை ரூ.1.63 லட்சம். அதே நேரத்தில் தண்டர்பேர்டு 500எக்ஸ் மாடலின் விலை ரூ.2.06 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புல்லட் டிரையல்ஸ் 350 விலை ரூ.1.62 லட்சம். அதே சமயம் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் விலை ரூ.1.82 லட்சம். புல்லட் 500, கிளாசிக் 500 மற்றும் டிரையல்ஸ் 500 மாடல்களின் விலை முறையே ரூ.1.88 லட்சம், ரூ.2.01-2.11 லட்சம் மற்றும் ரூ.2.07 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

Bike Price With Effect From April
Royal Enfield Bullet 350 Rs 1.21 Lakh
Royal Enfield Bullet 350 ES Rs 1.35 Lakh
Royal EnfieldClassic 350 Rs 1.53 Lakh
Royal EnfieldClassic 350 CS Rs 1.63 Lakh
Royal EnfieldThunderbird 350 Rs 1.56 Lakh
Royal EnfieldBullet Trails 350 Rs 1.62 Lakh
Royal EnfieldThunderbird X 350 Rs 1.63 Lakh
Royal EnfieldHimalayan Rs 1.82 Lakh
Royal EnfieldBullet 500 Rs 1.88 Lakh
Royal EnfieldClassic 500 Rs 2.01 Lakh
Royal EnfieldThunderbird X 500 Rs 2.06 Lakh
Royal EnfieldBullet Trails 500 Rs 2.07 Lakh

இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அனைத்து ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது... காரணம் இதுதான்...

இதில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மாடல்கள் இடம்பெறவில்லை. ஏனெனில் இவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதே ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன்தான் வந்தன. எனவே இவ்விரு மாடல்களின் விலை மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது.

Most Read Articles
English summary
Royal Enfield Motorcycles New Price List. Read in Tamil
Story first published: Tuesday, April 9, 2019, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X