இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃரபீல்டு மோட்டார்சைக்கிள்களில் இமயமலையில் சாகசப் பயணம் செல்வோருக்கு ஏதுவாக இரண்டு புதிய சர்வீஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை முழுமையாக காணலாம்.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

மோட்டார்சைக்கிள் பிரியர்கள் இமயமலையில் உள்ள லே உள்ளிட்ட உலகின் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் சாகசப் பயணம் மேற்கொள்வதை வாழ்நாள் கனவாக வைத்திருக்கின்றனர். மிக மோசமான வானிலை, கரடுமுரடான மலைப்பாதைகளில் மோட்டார்சைக்கிளில் சாகசப் பயணம் செல்வது அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

இந்த நிலையில், இமயமலை சாகசப் பயணங்களுக்கு பெரும்பாலும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

நூற்றுக்கணக்கில் இருந்த எண்ணிக்கை தற்போது ஆயிரக்கணக்கானோர் சாகசப் பயணம் மேற்கொள்ளும் வகையில் பன்மடங்கு அதிகரித்து விட்டது. மேலும், இதற்காக பல பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்துகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

இந்த நிலையில், இமயமலையில் சாகசப் பயணம் இதனை மனதில் வைத்து, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை திறந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இமயமலையில் மோட்டார்சைக்கிளில் சாகசப் பயணம் செல்வோருக்கு ஏதுவாக ஸ்பித்தி மாவட்டத்தில் உள்ள கஸா மற்றும் லஹவுல் மாவட்டத்தில் உள்ள கீலாங் ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த புதிய சர்வீஸ் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

இந்த சர்வீஸ் மையங்களில் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் நான்கு மோட்டார்சைக்கிள்களை பழுது நீக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. முறையான பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் இந்த சர்வீஸ் மையங்களில் பணியமர்ந்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, இந்த சர்வீஸ் மையங்களில் அனைத்து உதிரிபாகங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

இதனால், இமயமலைக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் பயணிப்போர் இனி அச்சமின்றி செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலும் டீலர்ஷிப் இயங்கி வருகிறது. இதனால், இமயமலை பயணங்களுக்கு இனி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் செல்வது சிறந்த தேர்வாக அமையும் என்று தெரிகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 11 டீலர்ஷிப்புகள் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 943 டீலர்ஷிப்புகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சிறந்த சேவையை அளிப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டு புதிய சர்வீஸ் மையங்களை திறந்தது ராயல் என்ஃபீல்டு!

இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் தவிர்த்து, வடகிழக்கு மாநிலங்களில் சாகசப் பயணம் செல்வோருக்கு ஏதுவாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield has extended its service network in the country by opening two now service centres in Himachal Pradesh to cater Himalayan adveture bike trip enthusiasts.
Story first published: Wednesday, July 10, 2019, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X