இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த பைக்கை தயாரிக்க திட்டம்! சிறப்பு தகவல்

ராயல் என்பீல்டு நிறுவனம் பெண்கள் மற்றும் மெல்லிய தேகமுடைய இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் புதிய ரகத்திலான பைக்கை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒன்று. இது, பழைமை மாறாத கிளாசிக் தோற்றத்திலான வாகனங்களை உருவாக்குவதில் கை தேர்ந்த நிறுவனமாக இந்தியாவில் செயல்பட்டு வருகின்றது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

இதனாலயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. மேலும், விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாகவும் செயல்பட்டது. ஆனால், தற்போது இந்நிலை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது.

இதற்கு, சந்தையில் அதிகரித்துள்ள போட்டியும், மந்த நிலையுமே முக்கிய காரணம். இதனால், ராயல் என்பீல்டு நிறுவனம் அண்மைக் காலங்களாக கடும் விற்பனை வீழ்ச்சியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

எனவே, விற்பனை வீழ்ச்சியில் விடுதலைப் பெற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், முன்னதாக மலிவு விலை புல்லட் பைக்கை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த சோதனையோட்டமும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய ரகத்திலான இருசக்கர வாகனத்தை தயாரிக்க இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

அதன்படி, மெல்லிய மற்றும் உயரம் குறைந்த ரகத்திலான பைக்கை ராயல் என்பீல்டு உருவாக்க இருப்பதாக இடி ஆட்டோ ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜென்எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் பெண்கள் மற்றும் மிகவும் ஒல்லியான உடல் தேகமுடைய இளைஞர்களைக் கவரும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

ஒரு காலத்தில் சாலையில் நடப்பதற்கே தயங்கி வந்த பெண்கள் தற்போது இருசக்கர வாகனம் முதல் விமானம் வரையிலான அனைத்து வாகனங்களையும் இயக்கி வருகின்றனர். அந்தவகையில், பெண்கள் உடல்வாகிற்கு ஏற்ப ஸ்கூட்டர்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும், ஒரு சில பெண்கள் பைக் மீதுள்ள அதீத மோகத்தினால் ஸ்கூட்டர்களுக்கு பதிலாக பைக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

இதில், பெரும்பாலான இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இருசக்கர வாகனமாக கருதப்படும் புல்லட் மீதும் அவர்களுக்கு ஒரு கண் உண்டு.

ஆனால், இதன் அதீத எடை பெண்களுக்கு மகிவும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. அவ்வளவு ஏன், சில உடல் கட்டுமஸ்தான ஆண்களுக்கே ராயல் என்பீல்டு பைக்கை இயக்குவது சில சமயங்களில் மிக கடினமானதாக அமைகின்றது. இதில், பூ போன்ற மேனியுடைய பெண்கள் சற்றே கூடுதலான சிரமத்தை சந்திக்கின்றனர்.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

ஆகையால், பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான புல்லட் பைக்குகளைக் காட்டிலும் குறைவான எடை மற்றும் சற்று உயரம் குறைந்த இருக்கை என பல்வேறு அம்சங்களுடன் புதிய பைக்க களமிறக்க உள்ளது. இந்த பைக்கின் ஸ்டைல் ரோட்ஸ்டர் மாடலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதனை ராயல் என்பீல்டு நிறுவனம் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

ஜே1சி என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் எக்ஸ்ப்ளோரர் பிராண்டின்கீழ் விற்பனைச் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

முன்னதாக ராயல் என்பீல்டு பைக்குகளை இயக்கிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த புதிய பைக்கை ராயல் என்பீல்டு உருவாக்கி வருகின்றது. அவ்வாறு, பெண்கள் தங்களுக்கு எந்தவகையில் பைக்குகள் உருவாக்கப்பட்டால் பயன்படுத்த சுலபமாக இருக்கும் என கருத்து தெரிவித்தனரோ அந்த தகவலின் அடிப்படையில் புதிய பைக் கட்டமைக்கப்படுகின்றது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

ஆனால், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புதிய பைக்குறித்த மற்ற தகவல்களை பரிமாறிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. எனவே, புதிய பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை போன்றவற்றின் தகவல் சர்பிரைஸாகவே உள்ளது.

இருப்பினும், புதிய பைக் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலேயே உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

இந்தியாவில் இதுவரை 161.1 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், பத்தில் ஒரு பங்கு பெண் ஓட்டுநர்கள் ஆவர்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 7 முதல் 8 சதவீதம் வரை பெண் வாடிக்கையாளர்களாகவே காட்சியளிக்கின்றனர்.

இனி பெண்களுக்கும் ராயல் என்பீல்டு பைக்.. மெல்லிய, எடை குறைந்த டூ-வீலரை உருவாக்க திட்டம்.. சிறப்பு தகவல்..!

ஆகையால், புதிய அடக்கமான ராயல் என்பீல்டு பைக் கூடுதலாக இந்த பெண் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ராயல் என்பீல்டு எதிர்பார்க்கின்றது.

அதேசமயம், ராயல் என்பீல்டின் இந்த யுக்தி அதற்கு தக்க பலனை அளிக்கலாம் என வல்லுநர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இது பெண் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி மெல்லிய தேகமுடைய வாடிக்கையாளர்களையும் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Royal Enfield Planning To Launch Lightweight Bikes For Girls. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X