அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைாயன 7000 யூனிட் மோட்டார்சைக்கிள்களை திரும்ப வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், நடப்பாண்டின் மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 30 ஆகிய நாட்களில் தயாராகிய 7 ஆயிரம் மோட்டார்சைக்கிளை திரும்ப வருவமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த குறிப்பிட்ட நாட்களில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களில், பாதிப்புக்குள்ளான பிரேக்கிங் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்த நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

இந்த நடவடிக்கையின்மூலம், பாதிப்புக்குள்ளான அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் பிரேக்கிங் சிஸ்டம் சர்வீஸ் செய்யப்பட உள்ளது.

அதேசமயம், குறிப்பிட்ட நாட்களில் புல்லட் மற்றும் புல்லட் எலக்ட்ரா மாடல் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்த இரு மாடல்களைத்தான் ராயல் என்பீல்டு நிறுவனம், 'சர்வீஸ் இன்டர்வென்ஷன்'-க்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

அந்தவகையில், இந்த இரு மாடல்களிலும் விற்பனையான 7 ஆயிரம் யூனிட் மோட்டார்சைக்கிள்களுக்கும், பிரேக் காலிபர் போல்டுகள் ரீபிளேஸ் செய் செய்யப்பட உள்ளன. பிரேக் காலிபர் போல்டுகள், வாகனத்தின் பிரேக்கிங் திறனில் பெரும் பங்களிப்பவையாக இருக்கின்றன.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

இவை குறிப்பிட்ட நாட்களில் தயாரான புல்லட் மற்றும் புல்லட் எலக்ட்ரா ஆகிய மாடல்களில், பாதிப்புக்குள்ளானவையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தி வந்த அதன் உரிமையாளர்கள், அவ்வப்போது பிரச்னைகளை சந்தித்து வந்தனர். இதனால், அந்த நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக இதுகுறித்த புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

எனவே, தொடர் புகாரைத்தொடர்ந்து அந்த நிறுவனம் ஆராய்ந்ததில், மார்ச் 20 மற்றும் ஏப்ரல் 30 ஆகிய நாட்களில் தயாரான புல்லட் மற்றும் புல்லட் எலக்ட்ரா மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம்கள் கோளாறு கொண்டவையாக தயாராகி இருந்திருப்பது தெரியவந்தது.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

ஆகையால், அவற்றை சீர்செய்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் தயாரான மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் அழைத்துள்ளது.

முன்னதாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 410 மாடல் மோட்டர்சைக்கிள்கள் கடந்த 2016ம் ஆண்டில் இதேபோன்று திரும்ப வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு, இந்த மாடல் மோட்டார்சைக்கிளில் எழும்பிய அதிகளவிலான சத்தம் இருந்தது காரணமாக.

அவசர அவசரமாக 7000 பைக்குகளை திரும்ப வரவழைக்கும் ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா???

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த புல்லட் பைக்குகள், அந்த நிறுவனத்தின் 350சிசி எஞ்ஜின் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள்களில் 346சிசி பவரை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின்கள் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. இவை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 1.17 லட்சம் மற்றும் ரூ. 1.34 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன.

Source: livemint

Most Read Articles
English summary
Royal Enfield Recall In India — Over 7000 Bullet & Electra Recalled Over Faulty Brakes. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X