கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

350-500சிசி மோட்டார்சைக்கிள்களை அதிகளவில் தயாரிக்கும் நிறுவனமாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் விளங்குகிறது. ஆனால் இதன் விற்பனை யூனிட்களின் எண்ணிக்கை 2018 அக்டோபருடன் ஒப்பிடும்போது இந்த அக்டோபரில் குறைவான எண்ணிக்கையே பெற்றுள்ளது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

2018 அக்டோபரில் 70,044 பைக்குகளை விற்பனை செய்துள்ள ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 67,538 பைக்குகளை தான் விற்றுள்ளது. இதனால் கடந்த வருட அக்டோபர் மாதத்தை விட 3.5 சதவீத விற்பனை வீழ்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

அதுவே 54,858 யூனிட்கள் விற்பனையான கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த எண்ணிக்கை 23 சதவீதம் கூடுதலாகும். 2019 அக்டோபர் மாதத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பதிவு செய்துள்ள இந்த 67,538 என்கிற எண்ணிக்கை மொத்த விற்பனை எண்ணிக்கையே.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

சில்லறை விற்பனை எல்லாம் சேர்த்து பார்த்தால் மொத்தம் 95,000 பைக்குகளை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சில்லறையாக இவ்வளவு அதிக பைக்குகளை விற்பனை செய்ததற்கு மிக முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் தான்.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

ஒரு வருடத்திற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பதிவு செய்த மிக குறைந்த விற்பனை வீழ்ச்சியை கொண்ட மாதம், 2019 அக்டோபர் மாதம் தான். அதாவது, கடந்த மாதத்தில் 3.58 சதவீத விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இந்நிறுவனம் இம்மாதத்திற்கு ஏறக்குறைய 8 மாதத்திற்கு முன்பு தான் மிக குறைவான விற்பனை வீழ்ச்சியை (7.00) பதிவு செய்துள்ளது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

இதற்கு இடைப்பட்ட மாதங்களின் சராசரி விற்பனை வீழ்ச்சி 22 சதவீதமாகும். ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் 2019 அக்டோபர் மாதத்தில் பைக்குகளின் விற்பனையை பெருமளவில் அதிகரிக்க பல முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

இந்தியாவில் ஆட்டோமொபைலின் பெரும்பான்மையான துறைகள் ராயல் எண்ட்பீல்ட்டின் விற்பனை மற்றும் விற்பனை நெட்வொர்க்குடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. இவையே இந்நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணம்.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

அதுமட்டுமல்லாமல், ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் மலிவான விலை வேரியண்ட்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதும் ஒரு காரணம். ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் ரெகுலர் வேரியண்ட்களுடன் இந்த மலிவான விலை வேரியண்ட்களை ஒப்பிட்டு பார்த்தால் இவற்றின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரையில் குறைவாக உள்ளது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

இதனால் இவற்றின் விலையுடன் 200-250சிசி பைக்குகளின் விலைகளை தான் வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இதற்கிடையில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்களை பிஎஸ்6 தரத்தில் வெளியிடவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

ஆதலால் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 2020 ஏப்ரல் 1ஆம் தேதி காலக்கெடுவுக்குள் ராயல் எண்ட்பீல்டின் கிளாசிக், புல்லட், எலக்ட்ரா, தண்டர்பேர்டு மற்றும் அதன் 650 ட்வின்ஸ் என அனைத்து பைக்குகளும் பிஎஸ்6 தரத்தில் மேம்படுத்தப்பட்டுவிடும்.

கிளாசிக் 350 பைக்கால் விற்பனையில் உச்சத்தை தொட்ட ராயல் எண்ட்பீல்டு...

இதிலும் ஸ்பெஷலாக பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் இதனுடன் சேர்த்து புதிய தலைமுறைக்கும் அப்டேட் செய்யப்படவுள்ளதாம். இந்த புதிய தலைமுறையின் மூலம் இந்த இரு பைக்குகளும் புதிய சேசிஸ், புதிய டிசைன் மற்றும் புதிய என்ஜின்களை பெறவுள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 helps RE achieve almost 95,000 retail sales in 2019 October
Story first published: Thursday, November 7, 2019, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X