ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் ஒன்றுகூடும் இந்த ஆண்டுக்கான ரைடர் மானியா திருவிழா கோவாவில் நடக்க இருக்கிறது. இதுபற்றிய விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் சங்கமமாகும் திருவிழா ஆண்டுதோறும் ரைடர் மானியா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் ரைடர் மானியா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

வரும் நவம்பர் 22 முதல் 24 வரை கோவாவில் ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா நடக்க இருக்கிறது. இந்த திருவிழாலில் பங்கேற்பதற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு, கஸ்டமைஸ் மாடல்களின் கண்காட்சி, பைக் சாகச நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுடன் ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா நடக்க இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

மேலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கான ஆக்சஸெரீகள் உள்ளிட்ட இதர ஸ்டால்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாமல் இந்த திருவிழாவை நடத்தவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

MOST READ: ரிப்பேரை சரி செய்ய பாஜக அரசிடம் காசு இல்லையாம்... முலாயம் கையை விட்டு போகும் குண்டு துளைக்காத கார்

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக உலோகத்தாலான நவீன வாட்டர் பாட்டில்கள் பங்கேற்கும் ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும், முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத திருவிழாவாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் 8,000 ராயல் என்ஃபீல்டு உரிமையாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

MOST READ: உச்சபட்ச அபராதத்திற்கு எதிராக தொடர் புகார்: மத்திய அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு!

ராயல் என்ஃபீல்டு ரைடர் மானியா திருவிழா... கோவாவில் நடக்கிறது!

இந்த கண்காட்சியை கண்டுகளிப்பதற்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான கூடுதல் விபரங்கள், முன்பதிவு, டிக்கெட் விற்பனைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பெறலாம்.

Most Read Articles

English summary
Royal Enfield has announced the dates of annual motorcycle and music festival - 2019 Rider Mania and the bike maker has opened registrations for the same.
Story first published: Tuesday, September 24, 2019, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X