ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் ஒரே ஒரு மாடல் மட்டும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

இந்தியாவின் வாகன மார்க்கெட் சமீப காலமாக தள்ளாடி கொண்டுள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாகவே மிகவும் சரிவடைந்து வருகிறது. இதற்கு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டும் கூட விதிவிலக்கல்ல. ராயல் என்பீல்டு லைன் அப்பில் உள்ள டூவீலர் மாடல்களின் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாத விற்பனை நிலவரத்தை நீங்கள் கீழே காணலாம். இங்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலில், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாத விற்பனை நிலவரம் ஒப்பிடப்பட்டுள்ளது.

Royal Enfield Jun-19 Jun-18 YoY Diff %
Bullet 350 10,000 10,044 -0.44
Classic 350 33,790 50,426 -32.99
Electra 350 2,694 2,985 -9.75
Thunderbird 350 4,749 5,232 -9.23
Thunderbird 500 97 347 -72.05
Bullet 500 138 284 -51.41
Himalayan 1,223 942 29.83
Classic 500 640 2,328 -72.51
650 Twins 1,751 - -
ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

இந்த பட்டியலை பார்த்தால் பெரும்பாலான ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை சரிவடைந்திருப்பதை உங்களால் உணர முடியும். இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற மாடல்களாக திகழும் கிளாசிக் 350 உள்ளிட்டவையும் அடக்கம். குறிப்பாக கிளாசிக் 350 மாடலின் விற்பனை சுமார் 33 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 50,426 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 33,790ஆக சரிவடைந்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

இதுதவிர தண்டர்பேர்டு 350 மற்றும் 500, கிளாசிக் 500, எலாக்ட்ரா 350 உள்ளிட்ட மாடல்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. இதில், எலாக்ட்ரா மற்றும் தண்டர்பேர்டு 350 ஆகிய மாடல்களின் விற்பனை சுமார் 9 சதவீதம் என்கிற அளவிற்கு மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் தண்டர்பேர்டு 500 மாடலின் விற்பனை சுமார் 72 சதவீதம் என்கிற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் 97 தண்டர்பேர்டு 500 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில், 347ஆக இருந்தது.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

அதேபோல் ராயல் என்பீல்டு புல்லட் 500 மாடலின் விற்பனையும் சுமார் 51 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 284ஆக இருந்த புல்லட் 500 மாடலின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 138ஆக சுருங்கியுள்ளது. என்றாலும் புல்லட் 350 மாடல் விற்பனை எண்ணிக்கையை ஓரளவிற்கு தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த 2018 ஜூனில் 10,044 ஆக இருந்த புல்லட் 350 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2019 ஜூனில் 10,000 ஆக குறைந்துள்ளது. எனினும் இது 0.44 சதவீத சரிவு மட்டுமே.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இவ்வளவு ஏன்? தற்போதைய நிலையில் மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக உள்ள ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் விற்பனையும் கூட சரிவைதான் சந்தித்துள்ளது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மாடல்களும்தான் 650 ட்வீன்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. முந்தைய மாத அடிப்படையில் பார்த்தால் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களின் விற்பனை 27 சதவீதம் குறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்த 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை 1,751. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 2,427 யூனிட் 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இது 27 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 650 ட்வின்ஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் 650 ட்வின்ஸ் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே அவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டன. ஆனால் கடந்த மாதத்தில் அவற்றின் விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

எனினும் ஹிமாலயன் மாடலின் விற்பனை ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. ஹிமாலயன் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ள ஒரே ராயல் என்பீல்டு மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சுமார் 30 சதவீதம் என்கிற ஓரளவிற்கு சிறப்பான விற்பனை வளர்ச்சியை ஹிமாலயன் பதிவு செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் ராயல் என்பீல்டு வெறும் 942 ஹிமாலயன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1,223ஆக உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அட்வென்ச்சர் டூரர் ரக பைக் ஹிமாலயன். இந்திய மார்க்கெட்டில் சமீப காலமாக அட்வென்ச்சர் டூரர் ரக பைக்குகள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலின் விற்பனை உயர்ந்திருப்பதை அதைதான் காட்டுகிறது. இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது இக்கட்டான கால கட்டத்தில்தான் உள்ளது. எனினும் பண்டிகை காலத்தில் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீ மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
English summary
Royal Enfield Sales Model-Wise Break-Up For June 2019 — 650-Twins Record Biggest Decline In Sales. Read in Tamil
Story first published: Saturday, July 20, 2019, 19:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more