ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் அக்டோபர் மாதத்திற்கான விற்பனை சுமார் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் இந்த விற்பனை அதிகரிப்பிற்கு உறுதுணையாக இருந்த பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 67,538 ஆகும். இது 54,858 பைக்குகள் விற்பனையான 2019 செப்டம்பர் மாதத்தை விட 23 சதவீதம் அதிகம். தீபாவளி, ஆயுதப்பூஜை போன்ற பண்டிக்கைகள் கடந்த மாதத்தில் வந்திருந்ததும் ராயல் எண்ட்பீல்டின் இந்த வளர்ச்சிக்கு ஒரு காரணம் என கூறலாம்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

இந்த 67,538 என்கிற விற்பனை எண்ணிக்கையில் கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதம் ஆகும். 38,936 கிளாசிக் 350 பைக்குகளும், 15,454 புல்லட் 350 பைக்குகளும் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

கிளாசிக் 350 பைக்கின் இந்த விற்பனை எண்ணிக்கை 29,376 யூனிட் பைக்குகள் விற்பனையான கடந்த செப்டம்பர் மாதத்தை விட 32.5 சதவீதம் அதிகமாக இருந்தாலும், 2018 அக்டோபர் மாதத்தை விட 15.63 சதவீதம் குறைவாகும். கிளாசிக் 350 பைக் 2018 அக்டோபரில் 46,148 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

கிளாசிக் 350 பைக் மாடல் தான் ராயல் எண்ட்பீல்டின் சிறந்த விற்பனை மாடலாக உள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிங்கிள் சேனல் மற்றும் ட்யூல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு மற்றும் புதிய நிற தேர்வுகளையும் கிளாசிக் 350 பைக்கில் வழங்கியுள்ளது.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

இதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்படி கஸ்டமைஸேஷன் செய்து கொள்வதற்காக விசேஷ ஆக்சஸெரீகளையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதுகுறித்த விரிவான தகவல்களையும், அவற்றின் விலைகளையும் கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

இரண்டாவது இடத்தில் உள்ள புல்லட் 350 பைக்கானது 2018 அக்டோபர் மாதத்தை விட 34.96 சதவீதமும் 2019 செப்டம்பர் மாதத்தை விட 24.64 சதவீதமும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது. புல்லட் 350 பைக்கின் 2018 அக்டோபர் மாதத்தின் விற்பனை பைக்குகளின் எண்ணிக்கை 11,451 யூனிட்கள், 2019 செப்டம்பர் மாதத்தின் விற்பனை பைக்குகளின் எண்ணிக்கை 12,399 யூனிட்கள் ஆகும்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் எலக்ட்ரா 350, தண்டர்பேர்டு 350 பைக் மாடல்கள் உள்ளன. இவை இரண்டும் முறையே 5,613 யூனிட்கள், 4,108 யூனிட் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

இவற்றிற்கு அடுத்த இடத்தில் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 என்கிற 650 ட்வின்ஸ் பைக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான இவை 2019 அக்டோபரில் 1,724 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 1,856 பைக்குகள் விற்பனையான கடந்த செப்டம்பர் மாதத்தை விட 7.11 சதவீதம் குறைவு.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்த 650 ட்வின்ஸ் பைக்குகளில் விலை அதிகரிப்பு இல்லாமல் லென்ஸ் ஹெட்லைட் உள்பட சில அப்டேட்களையும் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் முழு விவரங்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

1,172 பைக்குகள் விற்பனையுடன் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் 6-வது இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை 2019 செப்டம்பரை விட 16.52 சதவீதம் குறைவாக இருந்தாலும், 1,089 யூனிட்கள் விற்பனையான 2018 அக்டோபர் மாதத்தை விட சிறிது அதிகமாகும்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

இதற்கு அடுத்த மூன்று இடங்களில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500சிசி பைக்குகளான கிளாசிக் 500, தண்டர்பேர்டு 500 மற்றும் புல்லட் 500 பைக்குகள் உள்ளன. இந்த மூன்று மாடல்களுமே 2018 அக்டோபர் மாதத்தை விட கடந்த அக்டோபரில் மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்திலும் தண்டர்பேர்டு 500 பைக் மட்டும் தான் 12.35 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் உள்ளது.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

மற்ற இரண்டும் விற்பனையில் தொடர்ந்து சரிவை நோக்கியே செல்கின்றன. இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் இந்த பைக்குகளை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தாமல் இவற்றின் தயாரிப்பை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தவுள்ளது. இந்த தயாரிப்பு நிறுத்தம் குறித்த முழுமையான தகவல்களை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ராயல் எண்ட்பீல்டின் அக்டோபர் விற்பனை நிலவரம்... 350சிசி பைக்குகள் டாப், ஆனால் 500சிசி?

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் 500சிசி பைக்குகளை பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யவில்லை என்றாலும் மற்ற மாடல்களான கிளாசிக் 350, தண்டர்பேர்டு 350 மற்றும் ஹிமாலயன் உள்ளிட்டவற்றை 2020ல் பிஎஸ்6 என்ஜினுடன் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் ஹிமாலயன் பைக் பிஎஸ்6 அப்டேட்டால் தற்போதைய விலையான ரூ.1.81-ல் இருந்து ரூ.1.90 லட்சமாக அதிகரிக்க உள்ளது என்கிற தகவல் மட்டும் தற்போதைக்கு வெளியாகியுள்ளது.

Most Read Articles
English summary
Royal Enfield sales Ocotober India classic 350 best selling model
Story first published: Saturday, November 23, 2019, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X