ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழப்போகிறது. இதனால் அதன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 647 சிசி, பேரலல் டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.50 லட்ச ரூபாய். அதே சமயம் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 2.65 லட்ச ரூபாய். தற்போதைய நிலையில் இந்தியாவின் டிவின் சிலிண்டர் இன்ஜின் செக்மெண்ட்டில் கிடைக்கும் மலிவான விலை மோட்டார் சைக்கிள்களாக இவை கருதப்படுகின்றன.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

இதன் காரணமாகவும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. ஆனால் ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் என அழைக்கப்படும் இவ்விரு மோட்டார் சைக்கிள்களிலும் தற்போது ஸ்போக் வீல் மற்றும் ட்யூப் டயர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மட்டுமல்லாது பெரும்பாலான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்கள் இப்படித்தான் உள்ளன. தற்போதைய நிலையில், தண்டர்பேர்டு 350எக்ஸ் மற்றும் 500எக்ஸ் ஆகியவை மட்டுமே ட்யூப் லெஸ் டயர்களுடன் (Tubeless Tyres) விற்பனைக்கு வரும் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களாக திகழ்கின்றன.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 டிவின்ஸ் உள்பட எஞ்சிய அனைத்து மோட்டார் சைக்கிள்களும், ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ட்யூப் டயர்களில்தான் இயங்குகின்றன. வெளி மார்க்கெட்டில் அலாய் வீல்களை பொருத்தி கொள்ளலாம் என்றாலும், மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் வழங்கும் அளவிற்கு அது தரமானதாக இருக்குமா? என்பது சந்தேகமே.

இது எவ்வளவு அபாயகரமானது? என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியது. ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஒருவர் வெளி மார்க்கெட்டில் அலாய் வீல்களை பொருத்தியிருந்தார். ஆனால் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அலாய் வீல் உடைந்து நொறுங்கி, அந்த வாலிபர் தலைகுப்புற கீழே விழுந்தார்.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பி விட்டார். என்றாலும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சமூக வலை தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களில், அலாய் வீல்கள் மற்றும் ட்யூப் லெஸ் டயர்களை வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.

இந்த சூழலில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும், அலாய் வீல் மற்றும் ட்யூப் லெஸ் டயர்களை வழங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரு மோட்டார் சைக்கிள்களின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம் இதுதான்... எகிறும் எதிர்பார்ப்பு

ட்யூப் டயர்கள் பஞ்சராகி விட்டால் நிலைமை விபரீதமாகி விடும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்து கொண்டிருக்கையில், பஞ்சர் ஏற்பட்டால் சிக்கல்தான். ராயல் என்பீல்டு ரைடர்கள்தான் பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் லாங் டிரிப் அடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவே ட்யூப் லெஸ் டயராக இருந்தால் நிலைமையை எளிதாக சமாளித்து விட முடியும்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நேரடி போட்டியாளரான ஜாவா கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் ரீ லான்ச் ஆனது. அதன்பின் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் இத்தகைய மாற்றங்களை செய்வது அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield To Introduce Alloy Wheels In Interceptor 650 And Continental GT 650. Read in Tamil
Story first published: Thursday, March 14, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X