ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

ராயல் என்பீல்டு லைன் அப்பின் மிக மலிவான விலை கொண்ட மாடல் என்ற பெருமையுடன் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்று வெகு விரைவில் விற்பனைக்கு களமிறங்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இந்திய ஆட்டோமொபைல் துறை சமீப காலமாக வீழ்ச்சி பாதையில் பயணித்து கொண்டுள்ளது. கார், டூவீலர் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்திய மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக அனைத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன. மார்க்கெட்டில் நிலவி வரும் மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ராயல் என்பீல்டு நிறுவனமும் ஒன்று. மிக பழமையான ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

குறிப்பாக இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் தற்போது ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை முன்பு போல் இல்லை. ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ந்து 6 ஆண்டுகளாக இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதத்தில், ராயல் என்பீல்டு பைக் விற்பனை 20 சதவீதம் சரிவடைந்தது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

அதன்பின் வந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை 17 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. விற்பனை சரிவு என்ற நிலை அதற்கு அடுத்த மாதமும் தொடர்ந்தது. எனவே மோட்டார்சைக்கிள்களின் விற்பனையை அதிகரிக்க ராயல் என்பீல்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மிக குறைவான விலையில் புதிய பைக் ஒன்றை ராயல் என்பீல்டு களமிறக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு புதிய பைக் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த 2 புதிய மாடல்களிலும், அதிக சக்தி வாய்ந்த பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலையும் அதிகம்.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 மாடல்களின் விற்பனையும் சிறப்பாகதான் உள்ளது. ஆனால் அவை இரண்டும் சற்று விலை உயர்ந்த மாடல்கள் என்பதால், மிகப்பெரிய விற்பனையை எண்ணிக்கையை கொண்டு வந்து சேர்க்கவில்லை. எனவேதான் மலிவான விலையில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், தற்போதைய நிலையில் மிகவும் மலிவான விலை மாடல் என்றால், அது புல்லட் 350 மோட்டார்சைக்கிள்தான். இதன் விலை 1.21 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இதுவே எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இருக்க வேண்டும் என விரும்பினால், புல்லட் 350இஎஸ் மாடலுக்காக நீங்கள் 1.35 லட்ச ரூபாயை செலவிட வேண்டும்.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இந்த சூழலில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புல்லட் 350 பைக்கின் மிக மலிவான புதிய வேரியண்ட் ஒன்றை ராயல் என்பீல்டு களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடல்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லைன் அப்பில் மிக மலிவான விலை கொண்ட பைக்காக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

புல்லட் 350 அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்படுகிறது. தற்போது உள்ள புல்லட் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் இதுவும் உருவாக்கப்படும். இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தால் சவாலான விலையை நிர்ணயம் செய்ய முடியும். வித்தியாசமான எரிபொருள் டேங்க் பேட்ஜை இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

அதே சமயம் ரெகுலர் புல்லட் 350 மாடலில் குரோம் பூச்சுக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த குரோம் வேலைப்பாடுகள், புதிய மாடலில் இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கிக் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என 2 ஆப்ஷன்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ட்யூப் டயர்களுடன் ஸ்போக் வீல் வழங்கப்படலாம் என தெரிகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

ஆனால் மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதாவது புல்லட் 350 போலவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதன் அடிப்படையில் பார்த்தால், புதிய மாடலில் 350 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படும். ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புதிய வேரியண்ட்டை இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இதன் விலை 1.10 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை கொண்ட மாடல் என்ற பெருமையை இது பெறவுள்ளது. இது சவாலான விலை நிர்ணயம் என்பதால், விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் நம்புகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இதுதவிர புத்தம் புதிய 250 சிசி மாடல் ஒன்றை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருவதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தம் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 1 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு பைக்குகளில் மிக மலிவான விலை மாடல் விரைவில் களமிறங்குகிறது... விற்பனை சரிவதால் அதிரடி

இதன் காரணமாக ராயல் என்பீல்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் இது தொடர்பான பணிகள் தற்போது ஆரம்ப நிலையில் மட்டுமே உள்ளன. எனவே இந்த புதிய மாடல் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தால், அதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் பிடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Autocar India

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Royal Enfield To Launch More Affordable Bullet 350 Variant Soon. Read in Tamil
Story first published: Monday, August 5, 2019, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X