ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

புதிய ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு ட்ரையல் என்ற பெயரில் இந்த இரண்டு புதிய மாடல்கள் வர இருக்கின்றன.

ஜாவா உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய வாடிக்கையாளர் வட்டத்தை பெறும் வகையில், ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலிலான இரண்டு புதிய மாடல்களை விரைவில் களமிறக்க உள்ளது.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

புல்லட் 350சிசி மற்றும் புல்லட் 500சிசி அடிப்படையில் டிசைன் மாறுதல்களுடன் ஸ்க்ராம்ப்ளர் மாடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்கள் ட்ரையல் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த பதிய மாடல்கள் வரும் 26 அல்லது 27 தேதிகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்பாக டீசர் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலில் இருந்தாலும், இந்த புதிய 350 ட்ரையல் மற்றும் 500 ட்ரையல் மாடல்களானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட் இடம்பெற இருக்கிறது. இந்த மாடல்களில் முன்சக்கரத்தில் 19 அங்குல விட்டமுடைய முன்சக்கரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

சாதாரண சாலை மற்றும் ஆஃப்ரோடு சாலை என இரு பயன்பாட்டு சிறப்பு கொண்ட விசேஷ டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். தவிரவும், வயர் ஸ்போக் ரிம்களும் இந்த மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

இந்த பைக்கின் இருக்கை அமைப்பு, ஃபுட்பெக்குகளின் வடிவமைப்பும் ஆஃப்ரோடுகளில் செல்லும்போது ரைடர் நின்றுகொண்டு ஓட்டுவதற்கான சிறப்புடன் இருக்கும். இந்த இரு மாடல்களிலும் சைலென்சர் பின்புறத்தில் மேல் நோக்கி இருக்கும் வகையில் இருக்கிறது. அதாவது, நீர் நிலைகளை கடப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

இந்த இரு புதிய ராயல் என்ஃஃபீல்டு மாடல்களிலுமே முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி இருப்பதுடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். இதனை அனைத்து வைக்கும் வசதியும் உண்டு.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு 350 ட்ரையல் மாடலின் சேஸீயின் சப் ஃப்ரேம் சிவப்பு வண்ண பெயிண்ட் பூச்சும், 500 ட்ரையல் மோட்டார்சைக்கிளின் சப் ஃப்ரேம் ஆலிவ் பச்சை வண்ண பெயிண்ட் பூச்சும் கொடுக்கப்பட்டு இருக்கும். பிற உதிரிபாகங்கள் சாதாரண புல்லட் 350 மற்றும் புல்லட் 500சிசி மாடல்களிலிருந்துதான் பெறப்பட்டு இருக்கிறது.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு 350 ட்ரையல் மாடலில் இருக்கும் 346சிசி எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 500 ட்ரையல் மாடலில் இருக்கும் 499சிசி எஞ்சின் அதிகபட்சமாக 27.1 பிஎச்பி பவரையும், 41 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தும் ராயல் என்ஃபீல்டு!

புல்லட் மோட்டார்சைக்கிளின் ஆஃப்ரோடு மாடல்களாக வரும் ட்ரையல் மோட்டார்சைக்கிள்கள் சாதாரண மாடலைவிட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் விலையில் வர இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் டெலிவிரி துவங்கும் என தெரிகிறது. ஏற்கனவே, ஹிமாலயன் என்ற ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield Trials To Be Launched In India Soon.
Story first published: Saturday, March 16, 2019, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X