சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்: மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் இந்த அறிவிப்புதான்!

சென்னை வாசிகள்மீது, மற்ற நகர வாசிகள் பொறாமை கொள்ளும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். தற்போது, இந்தியாவின் மற்ற முக்கிய நகரவாசிகள் சிலர், சென்னை வாசிகளை அதிர்ஷ்டசாலிகள் என்று கூறுவதற்கு ஓர் முக்கிய காரணம் இருக்கின்றது.

ஆனால், இதனை அதிர்ஷ்டம் என்று கூறிவிட முடியாது. இருப்பினும் மற்ற நகரவாசிகளை ஒப்பிட்டு பார்க்கையில், சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகளாகதான் உள்ளனர்.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

இவ்வாறு, நாம் கூறுவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அறிவிப்பே முக்கிய காரணமாக இருக்கின்றது. அப்படி என்ன அந்த நிறுவனம் கூறிவிட்டது... அப்படிதானே கேட்கிறீர்கள், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள ட்வின் பைக்கிற்கான காத்திருப்பு காலம் மற்ற நகரவாசிகளைக் காட்டிலும் சென்னை வாசிகளுக்கு குறைவானதாக இருக்கின்றது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

ஆமாங்க, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகள், கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு பைக்குகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 7 மாதங்கள் கடந்தும், இந்த மவுசு சற்றும் குறையாமல் நீடித்த வண்ணம் இருக்கின்றது.

இந்திய வாகன சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும்போதும், கணிசமான விற்பனை விகித்தத்தை இந்த ட்வின் பைக்குகள் பெற்று வருகின்றன.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

ஆகையால், தற்போது வரை இந்த பைக்கிற்கான காத்திருப்பு காலம் நீடித்த வண்ணம் உள்ளது. முன்னதாக, உற்பத்தி குறைவு மற்றும் பணியாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சிக்கலை இந்நிறுவனம் சந்தித்து வந்தது. ஆனால், இந்த சூழல் தற்போது கணிசமாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆகையால், காத்திருப்பு காலமும் கணிசமாக குறைந்துள்ளது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

அந்தவகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான காத்திருப்பு காலத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், சென்னைதான் மிக குறைவான காத்திருப்பு காலமாக 2 மாதங்களைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், உச்சபட்ச காத்திருப்பு காலமாக தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு 4 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

இதில், சென்னைக்கு மட்டும் குறைவான காத்திருப்பு காலம் நிலவுவதற்கு, அந்நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு இயங்குவதே காரணமாக இருக்கின்றது.

இதன்காரணமாகவே, அண்மையில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, தனது சர்வீஸ் மையங்களில் தண்ணீரை சேமிக்கும் விதமாக, டிரை வாஷ் என்னும் புதிய முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய மாடல்களின் காத்திருப்பு காலத்தில் வித்தியாசம் நிலவுகின்றது. அவ்வாறு, இரண்டு மாடல்களுக்கும் நிலவும் காத்திருப்பு காலத்தை ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்கள் வாரியாக கீழே உள்ள பட்டியலில் காணலாம்...

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

இன்டர்செப்டார் 650 காத்திருப்பு காலம்:

சென்னை 2 மாதங்கள்

மும்பை 3-4 மாதங்கள்

டெல்லி 3-4 மாதங்கள்

பெங்களூரு 3 மாதங்கள்

புனே 3 மாதங்கள்

ஹைதராபாத் 4 மாதங்கள்

குருகிரம் 3-4 மாதங்கள்

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

கான்டினென்டல் ஜிடி 650 காத்திருப்பு காலம்:

சென்னை 2 மாதங்கள்

மும்பை 3-4 மாதங்கள்

டெல்லி 2 மாதங்கள்

பெங்களூரு 3 மாதங்கள்

புனே 3 மாதங்கள்

ஹைதராபாத் 4 மாதங்கள்

குருகிரம் 3-4 மாதங்கள்

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த இரு பைக்குகளும் உருவத்தில் மாறுபட்டு காணப்பட்டாலும், ஒரே திறனிலான எஞ்ஜினைதான் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களிலும், 648 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர்கள் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை வாசிகள் அதிர்ஷ்டசாலிகள்தான்... மற்ற நகரவாசிகளின் பொறாமைக்கு காரணம் ராயல் என்பீல்டு இந்த அறிவிப்புதான்...

அதேசமயம், கான்டினென்டல் ஜிடி 650 கஃபே ரேஸர் ஸ்டைலிலும், இன்டர்செப்டார் 650 பழைய க்ரூஸர் ஸ்டைலிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், இன்டர்செப்டார் 650 பைக் ரூ. 2.35 லட்சத்திற்கும், கான்டினென்டல் ஜிடி 650 மாடல் பைக் ரூ. 2.49 லட்சத்திற்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இவை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Royal Enfield Twin Bike August Waiting Period Revealed. Read In Tamil.
Story first published: Tuesday, August 6, 2019, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X