உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ள ஸ்கூட்டர்களுக்கான புதிய டிவைஸ் அனைவரையும் பிரம்மிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் டூவீலர் பயணங்களைதான் அதிகம் விரும்புகின்றனர். வெளியில் எங்கேயாவது வென்று வர வேண்டுமென்றால், அவர்களின் முதல் சாய்ஸ் நிச்சயம் இரு சக்கர வாகனங்களாகதான் இருக்கும். ஏனெனில் இந்தியாவில் நிலவி வரும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னையை சமாளிக்க டூவீலர்கள்தான் உகந்தவை.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

அதே சமயம் டூவீலர்கள் மிக அபாயகரமானவை என்பதையும் மறுக்க முடியாது. டூவீலர்களில் அவ்வளவாக ஸ்திரத்தன்மை இருக்காது. அதாவது பேலன்ஸ் செய்ய முடியாமல் நீங்கள் திடீரென தடுமாறி கீழே விழுந்து விட கூடிய அபாயம் இருந்து கொண்டே இருக்கும். இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான இரு சக்கர வாகன விபத்துக்களுக்கு இதுவும் மிக முக்கியமான காரணமாக உள்ளது.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

ஆனால் இந்தியாவை சேர்ந்த லிகர் மொபிலிட்டி (Liger Mobility) எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. ஐஐடி மற்றும் ஐஎஸ்பி (Indian School of Business- ISB) முன்னாள் மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து தொடங்கியுள்ள ஒரு நிறுவனம்தான் லிகர் மொபிலிட்டி. அவர்களுடைய கண்டுபிடிப்பு உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

புதிய தயாரிப்பு ஒன்றை லிகர் மொபிலிட்டி கண்டறிந்துள்ளது. ஸ்கூட்டர் தானாக பேலன்ஸ் செய்து கொள்ள (Self-balance) இது அனுமதிக்கிறது! இதுதவிர குரல் கட்டளைக்கும் (Voice Commands) இது ஸ்கூட்டரை கட்டுப்படுத்துகிறது!! இந்த தயாரிப்பு எப்படி செயல்படும்? என்பது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

இதில், லிகர் மொபிலிட்டியின் இணை நிறுவனர் அசுதோஷ் உபத்யாய் ஸ்கூட்டருக்கு வாய்ஸ் கமாண்ட் கொடுப்பதை நம்மால் காண முடிகிறது. அவர் ஸ்கூட்டருக்கு ரிவர்ஸ் கமாண்ட்டை கொடுத்தார். இந்த கமாண்ட்டை பெற்ற ஸ்கூட்டர், பார்க்கிங் ஸ்லாட்டில் இருந்து தானாக வெளி வருகிறது! வேறு எந்த வாகனத்திலும் இப்படியான ஒரு வசதியை தற்போது வரை காண முடிந்ததில்லை.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

ரைடர் கட்டுப்படுத்தாமலேயே, வெறும் குரல் கட்டளையை மட்டும் ஏற்று ஸ்கூட்டர் ரிவர்ஸில் வருவது நல்ல ஒரு வசதியாகதான் இருக்கிறது. ஆனால் இதற்கே நீங்கள் ஆச்சரியப்பட்டு விட வேண்டாம். 'Feet Always onboard' வசதியையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வசதியின் மூலம் உங்கள் கால்களை நீங்கள் எப்போதும் ஃப்ளோர்போர்டின் மீதே வைத்து கொள்ள முடியும்.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

அதாவது ஸ்கூட்டர் நிற்கும்போது நீங்கள் கால்களை ஊன்றி பேலன்ஸ் செய்ய தேவையில்லை. ஸ்கூட்டர் அதுவாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும். ஸ்கூட்டருக்கென உருவாக்கப்பட்டுள்ள டிவைஸ்தான் இதற்கு காரணம். எனவே கீழே விழுந்து விடுவோமோ? என நீங்கள் இனிமேல் அச்சம் கொள்ள தேவையில்லை. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? கீழே வீடியோவை பாருங்கள். இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.

லிகர் மொபிலிட்டி நிறுவனத்தின் இரண்டு ஆண்டு கால கடுமையான உழைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு பின் இந்த டிவைஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸை பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வகையான ஸ்கூட்டர்களிலுமே இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். எனினும் இந்த டிவைஸை இணைப்பதால், ஸ்கூட்டரின் விலை 10 சதவீதம் உயரும். ஆனால் 10 சதவீதம் என்பது மிகவும் மலிவானதுதான்.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

அதே சமயம் இந்த தயாரிப்பு இன்னும் புரோட்டோடைப் (Prototype) ஸ்டேஜில்தான் உள்ளது. எனவே இந்த டிவைஸ் எப்போது பெரிய அளவிலான உற்பத்திக்கு தயாராகும்? என்பது தெரியவில்லை. அதேபோல் மார்க்கெட்டில் உள்ள அனைத்து ஸ்கூட்டர்களுக்கும் இந்த டிவைஸ் கிடைக்குமா? என்பதும் தெளிவாக தெரியவில்லை.

உங்கள் டூவீலர் குரல் கட்டளைக்கு கட்டுப்படும்! நிற்கும்போது கால்களை ஊன்ற தேவையில்லை! செலவு குறைவுதான்

எனினும் இந்திய மார்க்கெட்டில் இது வெற்றியடைவதற்கான சாத்தியம் அதிகமாக தென்படுகிறது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: Electric Vehicles/YouTube

Most Read Articles
English summary
Self Balancing Electric Scooter: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X