மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கிய கங்குலி... யாருக்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை சவுரவ் கங்குலி தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கங்குலிக்கு வந்த புது பழக்கம்... இந்த விலை உயர்ந்த பைக்கை யாருக்காக வாங்கியுள்ளார் என தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்தியா உருவாக்கிய தலை சிறந்த கேப்டன்களின் பட்டியலில் சவுரவ் கங்குலிக்கு எப்போதுமே இடமுண்டு. 'தாதா' என செல்லமாக அழைக்கப்படும் கங்குலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் ஜெர்மனியை சேர்ந்த லக்ஸரி வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் ரசிகர்களில் ஒருவராகவே கங்குலி அறியப்படுகிறார். ஆம், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வாகனங்கள் மீது கங்குலி அதிக ஈடுபாடு காட்டக்கூடியவர்.

அதிலும் பிஎம்டபிள்யூ கார்கள் என்றால் கங்குலிக்கு கொள்ளை பிரியம். புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரைதான் கங்குலி தனது அன்றாட பயணங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் கங்குலி பயணம் செய்வதை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது.

கங்குலிக்கு வந்த புது பழக்கம்... இந்த விலை உயர்ந்த பைக்கை யாருக்காக வாங்கியுள்ளார் என தெரியுமா?

ஆனால் சமீப காலத்தில் கங்குலியை மோட்டார் சைக்கிள்களுடன் எங்குமே பார்த்தது கிடையாது. இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் டோனி மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.

எனவே மோட்டார் சைக்கிள்களில் டோனி வலம் வருவதை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது. இது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகும். குறிப்பாக நம்ம சென்னை சாலைகளில் டோனி பல முறை சர்வ சாதாரணமாக மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்துள்ளார்.

ஆனால் கங்குலி அப்படிப்பட்டவர் கிடையாது. மோட்டார் சைக்கிள்களை காட்டிலும் கார்களைதான் அவர் அதிகம் விரும்புவார். இப்படிப்பட்ட சூழலில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி310ஜிஎஸ் (BMW G310GS) என்ற மோட்டார் சைக்கிளை கங்குலி தற்போது வாங்கியுள்ளார்.

இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் (Entry Level) மோட்டார் சைக்கிள் ஆகும். கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில், ஜி310ஜிஎஸ் மற்றும் ஜி310ஆர் (G310R) ஆகிய 2 என்ட்ரி லெவல் மோட்டார் சைக்கிள்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இவை 310 டிவின்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மத்தியில் இவை இரண்டும் பிரபலமான மாடல்களாக திகழ்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூட கடந்த சில மாதங்களுக்கு முன் ஜி310ஆர் பைக்கை வாங்கியிருந்தார்.

கங்குலிக்கு வந்த புது பழக்கம்... இந்த விலை உயர்ந்த பைக்கை யாருக்காக வாங்கியுள்ளார் என தெரியுமா?

இந்த சூழலில்தான் கங்குலி, ஜி310ஜிஎஸ் மோட்டார் சைக்கிளை சொந்தமாக்கியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஷோரூம் ஒன்றில் கங்குலி பைக்கை டெலிவரி எடுத்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ படங்களை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் டிவிஷன் ஆகும். உலக அளவில் இந்நிறுவனத்தின் மூலமாகவே பிஎம்டபிள்யூ பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்குகள், தமிழகத்தின் ஓசூரில் செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் அமைத்துள்ள கூட்டணி அடிப்படையில்தான் இந்த பைக் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர ஜி310ஆர் மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஆகிய பைக்குகளும், பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த 3 பைக்குகளும் ஒரே மாதிரியான பிளாட்பார்மில் வடிவமைக்கப்படுகின்றன. இதுதவிர இன்ஜின், டயர், சஸ்பென்ஸன், பிரேக்குகள், எக்ஸாஸ்ட் உள்ளிட்ட இதர மெக்கானிக்கல் அம்சங்களிலும், இந்த 3 மோட்டார் சைக்கிள்களும் ஒன்று போலவேதான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும்.

கங்குலிக்கு வந்த புது பழக்கம்... இந்த விலை உயர்ந்த பைக்கை யாருக்காக வாங்கியுள்ளார் என தெரியுமா?

பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் மோட்டார் சைக்கிளில், 313 சிசி, வாட்டர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎஸ் பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தது.

இதன் மொத்த எடை 169.5 கிலோ. பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டேங்க் சுமார் 11 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 143 கிலோ மீட்டர்கள். இது ஒரு லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.49 லட்சம். பொதுவாக பார்க்கையில் இது அதிகமான விலைதான் என்றாலும், உலகிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மலிவான அட்வென்ஜர் (Adventure) ரக பைக் இதுதான்.

இந்திய மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கிற்கு நேரடி போட்டியாக எந்த பைக்குமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி சமீப காலத்தில் கங்குலியை மோட்டார் சைக்கிள்களுடன் பார்த்ததே கிடையாது.

எனவே இது அவருக்காக வாங்கப்பட்டிருக்குமா? என்பது சந்தேகமே. ஒருவேளை கங்குலியின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் இந்த பைக் வாங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஈடுபாடு இல்லாத கங்குலிக்காக வாங்கப்பட்டிருந்தால் அது ஆச்சரியமான விஷயம்தான். இந்த பைக்கில் கங்குலி வலம் வருவதை காண அவரது ரசிகர்கள் இல்லை... இல்லை... வெறியர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Sourav Ganguly Buys A New BMW G310GS Adventure Bike For Rs.3.49 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X