மாஸ் காட்ட போகும் தமிழகம்... கோவையில் தயாராகிறது சர்வதேச தரத்திலான மின்சார பைக்!

தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீவாரி மோட்டார்ஸ் நிறுவனம், சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில், பெர்ஃபார்மன்ஸ் ரக எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்ரீவாரி எலெக்ட்ரிக் பைக்

இந்தியாவின் மின்வாகன தேவையை அறிந்து, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதன் எலெக்ட்ரிக் ரக வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும், சில நிறுவனங்கள் இந்தியாவிற்கான மின் வாகனங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்தவகையில், அண்மைக் காலங்களாக மின் வாகனங்களின் அறிமுகம், படைவீரர்களின் அணிவகுப்பைப் போன்று தொடர்ச்சியாக களமிறங்கேறிய வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனம் இந்த வரிசையில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அதன் முதல் எலெக்ட்ரிக் ரக பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் சர்வதேச தரத்திலான பெர்ஃபார்மன்ஸ் மாடலாக தயாரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்த தகவலை ஆட்டோப்ரோ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீவாரி எலெக்ட்ரிக் பைக்

ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனம், டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியாளருடையது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம்... இது தானியங்கி நிறுவனமான டெஸ்லாவில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவருக்கு சொந்தமானதாகும்.

டெஸ்லா நிறுவனத்தை பற்றி நாங்கள் கூற வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், இந்நிறுவனம் உலகளாவிய அளவில் நான்கு சக்கர வாகன சந்தையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.

அதற்கு, டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருந்த சிறப்பம்சமே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதற்கேற்பவகையில், அந்த தானியங்கி எலெக்ட்ரிக் காரில், ஆட்டோ இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட, நவீன மற்றும் சொகுசு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதெல்லாம் எங்களுக்கு தெரியும், தற்போது களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் பைக்கைப் பற்றி கூறுங்கள் அப்படிதானே நீங்கள் கேட்கிறீர்கள். சரி, வாருங்கள் புதிதாக களமிறங்க உள்ள எலெக்ட்ரிக் பைக்கைப் பற்றி பார்க்கலாம்....

புதிதாக களமிறங்க இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு பிரணா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மின்சார பைக்கில் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக 35 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இந்த பைக் 0-த்தில் 60 கிமீ வேகத்தை பிடிக்க வெறும் நான்கு செகண்டுகளை எடுத்துக்கொள்கின்றது. இந்த பிக்-அப் வேகம் உண்மையிலேயே மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.

தொடர்ந்து, பிரணா எலெக்ட்ரிக் பைக் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அந்தவகையில், கிளாஸ், கிராண்ட் மற்றும் எலைட் ஆகிய வேரியண்டுகளிலேயே அது கிடைக்க உள்ளது. இதில் என்ட்ரீ லெவல் வேரியண்டாக கிளாஸ் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து கிராண்டும், பின்னர் ஹை எண்ட் மாடலாக எலைட்டும் உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப ரேஞ்சை வழங்கும். அவ்வாறு, 126 கி.மீட்டரில் இருந்து 250 கிமீ தூரம் வரை ஒரே ஒரு முழுமையான சார்ஜில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது.

இத்துடன், இந்த எலெக்ட்ரிக் பைக்குகளில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட உள்ளன. கூடுதலாக, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருப்பதைப்போன்று ரிவர்ஸ் மோடும் கொடுக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, முக்கிய கூறாக பிரணா எலெக்ட்ரிக் பைக்குககளில் "செல்ஃப்-ஹீலிங்" அம்சம் இணைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்த முழுமையான தகவல் கொடுக்கப்படவில்லை. இந்த சிறப்பம்சம் கவாஸாகி நிறுவனத்தின் சூப்பர் பைக்கான நிஞ்சா எச்2ஆர் பைக்கில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்ரீவாரி மோட்டார்ஸ் நிறுவனம், ஆண்டு ஒன்றிற்கு 30 ஆயிரம் யூனிட் பிரணா பைக்குகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதை, நமது கொங்குமண்டலமான கோயம்புத்தூரில் வைத்து உருவாக்க இருக்கின்றது. இதையடுத்து, உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட அடுத்த 18 மாதங்களில் அதனை 2 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கவும் அது இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கும் முன்பாக, தெற்கு மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 25க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.

இந்த எலெக்ட்ரிக் பைக்குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோன்று, இதன் விலை குறித்த தகவலும் கசியவில்லை இவை அறிமுகத்தின்போதே தெரியவரும். இருப்பினும், பிரணா எலெக்ட்ரிக் பைக் மலிவான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீவாரி எலெக்ட்ரிக் பைக்

ஏனென்றால், அண்மையில்தான் மத்திய அரசு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விதித்து வந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இத்துடன், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் கணிசமான அளவு மானியம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு உற்பத்தியாகும் பிரணா எலெக்ட்ரிக் பைக் அனைத்து தரப்பு மக்களும் சென்று சேரும் வகையில் மலிவான விலையில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Srivaru Motors Set To Launch Performance Electric Bike In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X