2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை காணலாம்.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

வரும் ஏப்ரல் மாதம் முதல் 125சிசி ரகத்திற்கு உட்பட்ட இருசக்கர வாகனங்களில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதன் பொருட்டு, இருசக்கர வாகனங்களை மேம்படுத்தி வாகன நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

அந்த வகையில், சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் தற்போது காம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத ஸ்கூட்டருக்கு ரூ.56,667 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடலைவிட ரூ.690 என்ற சற்றே கூடுதல் விலையில் இந்த சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்தியாவின் 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற மாடலாக சுஸுகி அக்செஸ் இருந்து வருகிறது. அதாவது, மாதத்திற்கு 40,000 யூனிட்டுகள் என்ற அளவில் விற்பனையில் அசத்தி வருகிறது.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்த ஸ்கூட்டர் வெறும் 101 கிலோ எடை கொண்டிருப்பதால் எளிதாக கையாள முடியும். மேலும், இதன் சிறப்பான தோற்றமும் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருந்து வருகிறது.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

அதேபோன்று, இந்த ஸ்கூட்டரின் செயல்திறன் மிக்க எஞ்சின் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இதே எஞ்சின்தான் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்த ஸ்கூட்டரில் 5.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பினால் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

இந்த ஸ்கூட்டரில் அலாய் வீல்கள், அனலாக் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், நீளமான இருக்கை அமைப்பு, புஷ் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் சார்ஜிங் போர்ட் வசதிகள் உள்ளன.

2019 சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹோண்டா ஆக்டிவா 125, ஹீரோ டெஸ்ட்டினி 125 மற்றும் டிவிஎஸ் என்டார்க் 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் போட்டி போடுகிறது. எனினும், இந்த ரகத்தில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycle India has launched their most-popular scooter offering, the Access 125 in the Indian market. The 2019 Suzuki Access 125 now comes with Combi-Braking System (CBS), ahead of the new safety norm implementation from April 2019.
Story first published: Saturday, February 2, 2019, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X