எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

இந்தியாவின் 125 சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. செயல்திறனில் இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த மாடலாக உள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் டிரம் பிரேக் - ஸ்டீல் சக்கரங்கள் மற்றும் டிஸ்க் பிரேக் - அலாய் சக்கரங்களுடன் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், சுஸுகி அக்ஸெஸ் 125 ஸ்கூட்டரில் டிரம் பிரேக் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட புதிய வேரியண்ட் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

இந்த வேரியண்ட்டானது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாகவும் வந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதுதவிர்த்து, புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலிலும் சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

ஸ்பெஷல் எடிசன் மாடலானது பெரிய ஃபுட்போர்டு, பெரிய இருக்கை அமைப்பு மற்றும் சுஸுகியின் ஈஸி ஸ்டார்ட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் மீட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள், சென்ட்ரல் லாக்கிங் வசதி, ஆயில் இண்டிகேட்டர், சிபிஎஸ் பிரே்கிங் சிஸ்டம், சேஃப்டி ஷட்டர் ஆகிய பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் 124 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சுஸுகியின் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பமும் உள்ளதால், லிட்டருக்கு 64 கிமீ வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரானது பியர்ல் சுஸுகி டீப் புளூ, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் மேட் ஃபைப்ராயின் க்ரே மற்றும் பியர்ல் மிராஜ் ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிரம் பிரேக் - அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மாடலானது ரூ.59,891 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டானது ரூ.61,590 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். நாட்டின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்!

புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல் மாடலானது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று கருதப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருந்து வருகிறது.

Most Read Articles
English summary
Japanese two wheeler manufacturer, Suzuki Motorcycle and scooters limited has launched new variant of Access 125 scooter in India.
Story first published: Monday, August 12, 2019, 16:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X