ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...

லிமிடெட் எடிசனாக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக சுஸுகி நிறுவனம், அதன் அக்செஸ் 125 மாடலை, ஸ்பெஷல் எடிசனாக தயார்செய்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகதவலை இந்த பதிவில் காணலாம்.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

சுஸுகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த ஸ்கூட்டர்களில் ஒன்றான அக்செஸ், ஸ்பெஷல் எடிசன் வெர்ஷனில் விற்பனைக்கு களமிறங்கி உள்ளது. இது அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் லிமிடெட் எடிசன் ஆக்டிவாவிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

ஆனால், இதன் விலை ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசனைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கின்றது. இருப்பினும், சிறப்பம்சம் மற்றும் ஸ்டைலில் சற்று ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிசனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிசன் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டருக்கு ரூ. 61,788 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

சுஸுகி அக்செஸின் இந்த புதிய அவதாரம், விற்பனையை ஊக்குவிக்கவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தை ஸ்பெஷல் எடிசன் லோகோ மூலம் அடையாளம் காணு முடிகின்றது. இத்துடன், புதிய மெட்டாலிக் மேட் போர்டியோக்ஸ் கலரில் இந்த ஸ்கூட்டர் ரம்மியமான காட்சியை வழங்குகின்றது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

இத்துடன், சஸுகி அக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரில் கூடுதல் சிறப்பு மாற்றங்களாக, புதிய காஸ்மெடிக் மாற்றம் மற்றும் சில அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஸ்கூட்டரின் ஃபுட் போர்ட் மற்றும் உள்பக்க பாடியின் நிறம் பீச் நிறத்திலும், அதன் வீலிற்கு மேட் பிளாக் நிறமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதைத்தொடர்ந்து, அதன் கண்ணாடி மற்றும் ஹெட்லைட்டுக்கு குரோம் பூச்சு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டரின் இந்த பாகங்கள் ஹைலைட்டாக காட்சியளிக்கின்றது. இத்துடன், இருக்கைக்கு பீச் கலர் மேலுறை வழங்கப்பட்டுள்ளது. அதன், மேல் பகுதியில் ஸ்பெஷல் எடிசன் என்ற முத்திரையிடப்பட்டுள்ளது. இதன் புதிய மாற்றங்கள் சுஸுகி அக்செஸ் தனித்துவான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

மேலும், நவீன வசதியாக டிசி சாக்கெட் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இது, ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உதவும். இந்த புதிய அப்டேட் அக்செஸ் ஸ்கூட்டரில், காஸ்மெடிக் மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் பெரிதாக செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், முன்னதாக காணப்பட்ட அதே 124 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் அதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

அந்த எஞ்ஜின் அதிகபட்சமாக, 8.7 பிஎச்பி பவரை 7,000 ஆர்பிஎம்மிலும், 10.2 என்எம் டார்க்கை 5,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜின் சிவிடி டிரான்ஸ்மிஷனில் இயங்கும் தன்மைக் கொண்டது. இத்துடன், சிறப்பு வசதியாக கார்புரேட்டர் ப்யூவல் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

இந்த ஸ்கூட்டரின் ப்யூவல் டேங்க் 5.6 லிட்டர் பெட்ரோலைப் சேமித்து வைத்துக் கொள்ளும் கெபாசிட்டியைப் பெற்றிருக்கின்றது. மேலும், பயணியின் சௌகரியமான பயண அனுபவத்திற்காக, அதன் முன்பக்கத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பர் கொண்ட மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

இத்துடன், பாதுகாப்பு வசதியாக ஸ்கூட்டரின் முன் பக்க வீலில் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பம் மற்றும் பிரிமியம் வசதியாக டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஒன் புஷ் சுஸுகி ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், சென்ட்ரால் லாக்கிங் மற்றும் சேப்டி ஷட்டர் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ: விலை எவ்வளவு தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசனின் இட வசதி மற்றும் லக்கேஜ் கொள்ளவு வசதி மற்றும் கால் வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும், முந்தைய மாடலைக் காட்டிலும் பரந்த விரிந்த அளவில் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், புதிய அக்செஸ் அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் அதிகளவு இடவசதியுடன் பிரிமியம் ரகத்தில் காட்சியளிக்கின்றது.

Most Read Articles
English summary
2019 Suzuki Access 125 SE Launched In India — Priced At Rs 61,788. Read In tamil.
Story first published: Wednesday, July 17, 2019, 20:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X