கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸெர் பைக்கிற்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் கூடுதலை இந்த பதிவில் காணலாம்.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் புத்தம் புதிய அழகுபடுத்தப்பட்ட மாடலான ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலை உலக வெளியீடாக இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்ட சில காலங்களிலேயே நல்ல விற்பனையைக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுஸுகி நிறுவனம் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலை கடந்த மே மாதம் 20ம் தேதிதான் அறிமுகம் செய்தது. மேலும், அன்றைய தினமே பைக்கிற்கான விற்பனையையும் துவக்கியது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலின் ஒட்டுமொத்த விற்பனைக்குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சியாம் எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை 1,526 சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடல் பைக்கின் யூனிட்கள், அதைப் புக் செய்த வாடிக்கையாளர்களுக்காக அனுப்பி வைத்திருப்பது கூறப்படுகின்றது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்த விற்பனை வளர்ச்சியானது, அதன் போட்டி மாடல்களான யமஹா எஃப்இசட் 25, பேஸர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் மாடல் பைக்குகளை கதிகலங்க வைத்துள்ளது. ஏனென்றால், இந்த விற்பனையானது மிக குறுகிய காலகட்டத்தில் நடைபெற்றதாக இருக்கின்றது. அதவாது, அறிமுகம் செய்யப்பட்ட கடந்த மே மாதம் 20ம் தேதிக்கு பின்னரே இத்தனை யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

அதேசமயம், ஹோண்டா சிபிஆர் 250ஆர் மாடல் வெறும் 54 யூனிட் பைக்குகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது. அதேபோன்று, யமஹா நிறுவனத்தின் எஃப்இசட்25 மற்றும் பேஸர் ஆகிய இரு மடால்களும் இணைந்த 910 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளன. ஜிக்ஸெர் எஸ்எஃப்250 மாடலை அந்த நிறுவனம் ரூ.1.70 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

இந்த விலை மதிப்பைக் கொண்டு பார்த்தால் இந்த பைக் ராயல் என்பீல்டின் ஹிமாலயன் மற்றும் கேடிஎம் 250 ட்யூக் உள்ளிட்ட பைக்குகளின் விற்பனையைக் கூட முறியடித்துள்ளது. அந்தவகையில், ஹிமாலயன் பைக் 1,192 யூன்ட்டுகளையும், 250 ட்யூக் 681 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலின் டெலிவரியானது நடப்பு மாதத்தின் துவக்கத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே நல்ல விற்பனை வளர்ச்சியைப் இந்த பைக் பெற்றுள்ளது. மேலும், இதே வளர்ச்சி வரும் மாதங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சுஸுகி நிறுவனம், இந்த மாடலின் நேக்கட் ரக மாடலையும் நடப்பாண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதன் வருகையானது, சுஸுகி ஜிக்ஸெர் வரிசையின் விற்பனை வளர்ச்சியை கணிசமாக அதிகரிப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், நேக்கட் ரக எஸ்எஃப் 250 மாடல் ரூ. 1.50 என்ற விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சுஸுகி இந்த 250 எஸ்எஃப் மாடலை ஐரோப்பிய டிசைனில் வடிவமைத்துள்ளது. இதனால், அதன் முந்தைய மாடலைக்காட்டிலும், இது மிகவும் அழகாகவும், ஸ்டைலான லுக்கையும் பெற்று, அதன் போட்டியாளர்களுக்கு கடுமையான எதிர்ப்பை வழங்கி வருகின்றது. மேலும், இந்த பைக்கை பிரத்யேகமாக குவார்டர் லிட்டர் புராடெக்டாக அந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

கேடிஎம், ஹோண்டா சிபிஆர் பைக்குகளை துவம்சம் செய்த புதிய சுஸுகி ஜிக்ஸெர்... ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில், அந்த நிறுவனம் அண்மையில் உருவாக்கிய அதீத திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜினப் பொருத்தியுள்ளது. அது, 249 சிசி திறனை வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது. இந்த எஞ்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பைக் கொண்டதாகும். 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த எஞஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Gixxer SF 250 Beats KTM Duke 250, Yamaha Fazer. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X