இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை சுஸுகி நிறுவனம் களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தங்களது பிரபலமான இன்ட்ரூடர் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடலின் 250 சிசி வெர்ஷனை (Suzuki Intruder 250) களமிறக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

தற்போதைய 155 சிசி மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய சுஸுகி இன்ட்ரூடர் 250 மோட்டார்சைக்கிளில், புத்தம் புதிய சேஸிஸ் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

ஜிக்ஸெர் எஸ்எப் 250 (Gixxer SF 250) மற்றும் அப்டேட் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எப் (155 சிசி) ஆகிய இரண்டு மாடல்களை சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 250 பைக்கில், 249 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 26.5 பிஎச்பி பவர் மற்றும் 22.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படும்.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

2020 ஆட்டோ எக்ஸ்போவின் வாயிலாக புதிய சுஸுகி இன்ட்ரூடர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஜிக்வீல்ஸ் தளம் செய்து வெளியிட்டுள்ளது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

சுஸுகி இன்ட்ரூடர் பைக்கின் புதிய 250 சிசி வெர்ஷன் அனைத்து லேட்டஸ்ட் உபகரணங்களையும் தாங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில் லைட்ஸ், நீளமான ஸ்விங்ஆர்ம் ஆகியவை வழங்கப்படவுள்ளது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

இன்ட்ரூடர் 250 பைக்கை இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்பாக, சுஸுகி நிறுவனம் முதலில் ஜிக்ஸெர் 250 என அழைக்கப்படும் ஜிக்ஸெர் எஸ்எப் 250 பைக்கின் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்ஷனைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 மோட்டார்சைக்கிள், இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் ட்யூக் 250 மற்றும் யமஹா எப்இஸட்25 உள்ளிட்ட மாடல்களும் இது போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

இதனிடையே இதர மெக்கானிக்கல் அம்சங்களை பொறுத்தவரை ஜிக்ஸெர் எஸ்எப் 250 மாடலில் இருந்து அப்படியே புதிய இன்ட்ரூடர் 250 மாடலுக்கும் கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் போர்க்ஸ் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஸன் உள்ளிட்ட பார்ட்ஸ்கள் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படலாம்.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

இருந்தபோதும் அதே பிரேக்கிங் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் ஆகியவை அப்படியே வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுஸுகி இன்ட்ரூடர் 250 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டி என எந்த மாடலையும் குறிப்பிட முடியாது.

இன்ட்ரூடர் பைக்கின் 250 சிசி வெர்ஷனை களமிறக்குகிறது சுஸுகி... அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது...

இருந்தபோதும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலுடன் இது போட்டியிடும். சுஸுகி நிறுவனம் இன்ட்ரூடர் 250 மாடலின் விலையை விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போது ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.9 லட்சம் வரையிலான ரேஞ்ஜில் (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Suzuki Intruder 250 In The Works — Launch Expected During 2020 Auto Expo. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X