இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

சுஸுகி நிறுவனம், அதன் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலின் மோட்டோஜிபி எடிசனை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலின் மோட்டோஜிபி எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் ரேஸிங் நீல நிறத்தில் மட்டும் கிடைக்கின்றது.

இதே அம்சம்தான் 2019 சுஸுகி மோட்டோஜிபி மெஷின், ஜிஎஸ்எக்ஸ்-ஆர்ஆர் மாடலிலும் காட்சியளிக்கின்றது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

அந்தவகையில், எக்ஸ்டர் டீகேல் முதல் டிஸ்டின்க்டிவ் வீல் பின் ஸ்ட்ரைப்ஸ் உட்பட அனைத்தும் ரேஸிங் தலைமுறைக்கு ஈடான தரத்தில் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோஜிபி எடிசன் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

இந்த பைக்கின் அறிமுகம்குறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை தலைவர் தேவாஷிஸ் ஹாண்டா கூறுகையில், "சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடலின் வெற்றியைப் பின் தொடர்ந்து, அதில் மோட்டோ ஜிபி எடிசனை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இதற்காக, மட்டற்ற மகிழ்ச்சியை நாங்கள் அடைந்துள்ளோம். சுஸுகியின் ரேசிங் ப்ளூ நிறம், நிறுவனத்தின் பந்தய திறையும், ஸ்பிரிட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது" என்றார்.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

மேலும், பேசிய அவர், "ஸ்போர்ட்டியான சமகால தோற்றம் மற்றும் உயர்திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஜிக்ஸெர் வரிசையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மற்ற மாடலைப் போலவே, இதுவும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பார்க்கின்றோம்" என்றார்.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோ ஜிபி பைக்கில், அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும் அதே 250 சிசி திறனிலான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்ட், எஸ்ஓஎச்சி ப்யூவல் இன்ஜெக்டட் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின், அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரை 9,000 ஆர்பிஎம்மிலும், 22.6 என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்மிலும் இந்த எஞ்ஜின் வெளிப்படுத்தும்.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

இத்துடன், எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆயில் கூலிங் சிஸ்டமானது, பைக் அதிக தூரம் செல்லும்போது மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும்போது எஞ்ஜினை குளிர்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது

மேலும், இந்த எஞ்ஜின் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38.5 கிமீ மைலேஜ் என கூறப்படுகின்றது. இந்த சிறப்பான மைலேஜ் திறனை வழங்க, ப்யூவல் இன்ஜெக்டட் சிஸ்டம் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

ஜிக்ஸெர் 250 மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆயில் குளிரூட்டும் தொழில்நுட்பம் இலகுரக மற்றும் அதீதி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜினுடன் வருகிறது. இந்த புதுமையான தொழில்நுட்பம் மென்மையான ஆக்சலேரேஷன், அதிக திறன் வெளியேற்றம், கச்சிதமான தன்மை, குறைந்த எரிபொருள் நுகர்வு, அதிக ஆயுள் மற்றும் பராமரிப்பு எளிமை உள்ளிட்டவற்றை நமக்கு வழங்குகின்றது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்ஓசிஎஸ் திறன் கொண்ட எஞ்ஜின், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் சவாரியை மிகவும் சுவாரஷ்யமானதாகவும், சிறப்பானதாகவும் மாற்றியமைக்கும்.

இத்துடன் கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், ஸ்பிளிட் இருக்கை, ஸ்போர்ட்டி ஸ்டான்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

மேலும், சிறப்பான ரைடிங் அனுபவத்திற்காக 17 இன்சிலான ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அது முன்பக்கத்தில் 110/70 என்ற அளவிலும், பின்பக்கத்தில் 150/60 என்ற அளவிலும் காணப்படுகின்றது. இதன் ப்யூவல் டேங்க் கெபாசிட்டி 12 லிட்டராக உள்ளது. அதேபோன்று, பாதுகாப்பு வசதிக்காக முன் மற்றும் பின்பக்க வீல்களுக்கு பைபர் டிஸ்க் பிரேக்குள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் மோட்டோஜிபி எடிசன் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 ரூ. 1.71 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதே விலையைதான் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பெற்றிருக்கின்றது.

இளைஞர்களை குறிவைக்கும் சுஸுகி: சிறப்பான பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்!

முன்னதாக, சுஸுகி நிறுவனம் இதேபோன்று, ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 மாடலின் மோட்டோஜிபி எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 1,10,605 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த பைக்கும் தற்போது அறிமுகமாகியுள்ள ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோஜிபி மாடலைப் போல் நீல நிற பெயிண்டிங் ஸ்கீமில் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Suzuki Launched Gixxer 250 SF MotoGP Edition In India. Read In Tamil.
Story first published: Wednesday, August 7, 2019, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X