வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்: எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்

வாடிக்கையாளர்களுக்கு எளிமையான வழியில் நிதியுதவியை வழங்க எச்டிபி நிறுவனத்துடன், சுஸுகி மோட்டார் சைக்கிள் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், எச்டிபி நிதி நிறுவனத்துடன் கூட்டமைத்திருப்பதாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்தது.

இருசக்கர வாகனங்களை வாங்கும், அதன் வாடிக்கையாளர்கள் மிக எளிதில் நிதியுதவியை பெறும் வகையில், இந்த கூட்டணியை அது மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு 24*7 நேரமும் நிதியுதவி பெறுவதற்கான வசதி வாய்ப்பினை இந்நிறுவனம் இணைப்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.

இத்துடன், கூடுதலாக இலவச ரோட் சைட் அசிஸ்டன்ட்ஸ், லாயல்டி கார்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு, இக்கூட்டணிமூலம் சுஸுகி வழங்க இருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

எச்டிபி ஓர் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும். இது நாடு முழுவதும், புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தின்மூலம், சுஸுகியின் புதிய வெளியீடாக களமிறங்கியுள்ள ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் ஆகிய மாடல்களில் விற்பனையாகும் பைக்குகளுக்குகூட நிதியுதவி பெற முடியும்.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

அதேசமயம், முன்னதாக நிலவி வந்த சில இக்கட்டான நடைமுறைகளை, எச்டிபி மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டமைப்பு சற்று தளர்த்தி உள்ளது. ஆகையால், தற்போது இரு சக்கர வாகனங்களுக்கு நிதியுதவி பெறும் கூடுதல் சுலபமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

எனவே, சுஸுகி நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், கணிசமான ஆவணங்களை சமர்பித்து கடனுக்கான உடனடி ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளலாம். இதில், மற்ற வங்கிகளைக் காட்டிலும் மிக குறைவிலான வட்டியே வசூலிக்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

நிதியுதவி சேவையில் ஈடுபட்டு வரும் எச்டிபி நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் பரந்த நெட்வொர்க்கை வைத்து இயங்கி வருகின்றது. எனவே, இதனை அணுகுவதும் மிக சுலபமானதாக உள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

இத்துடன், புதிய இருசக்கர வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடிப்படை நுகர்வோர் என்ற வகையில், வாடிக்கையாளரின் நிதி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதே இதன் பொருளாகும். இதுவே அதன் முக்கிய இலக்காகவும் இருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

இதற்காக, வாடிக்கையாளர் எந்நேரத்திலும் தங்களை அணுகும் வகையில், இணைய வழி விண்ணப்பத்தை அது அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும், அதாவது 24*7 டிஜிட்டல் முறையில் தளத்தில் உள்நுழைந்து இரு சக்கர வாகனத்திற்கான கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

இதுகுறித்து சுஸுகி நிறுவனத்தின் துணை தலைவர் தேவாஷிஷ் ஹாண்டா கூறியதாவது, "எச்டிபி நிதி நிறுவனத்துடனான எங்களின் கூட்டு, வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின்மூலம் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் எளிதான சில்லறை நிதி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

மேலும் பேசிய அவர், "இந்த கூட்டமைப்பு திருவிழா காலங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காலத்தில் பலர் புதிய வாகனங்களை விரும்புவார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டமைப்பு மிக உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். எந்தவொரு இடையூறும் இல்லாமல் வாகனத்திற்கு நிதியளிப்பதில் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் வழங்குவதற்கான ஒரு படியாகும்" என தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

தொடர்ந்து, எச்டிபி நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இது, சுஸுகி நிறுவனத்தின் பைக்குகளின் விற்பனையை வளர்ச்சியடைச் செய்வதற்கு உதவும். ஆகையால், கடந்த ஆறு மாதங்களாக இந்திய வாகனத்துறை சந்தித்து வரும் மந்த நிலையில் இருந்து சுஸுகி மோட்டார்சைக்கிள்கள் விலக்குப் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என கருத்து தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

முன்னதாக, சுஸுகி நிறுவனம் நிறுவனம் தற்போது நிலவி வரும் விற்பனை வீழ்ச்சியைக் குறைக்கும் விதமாக, அதன் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலில் மோட்டோஜிபி எடிசனை அண்மையில் அறிமுகம் செய்தது. ஸ்பெஷல் எடிசனாக தயாராகிய இந்த பைக், ரேஸிங் நீல நிறத்தில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும் இந்த பைக்கில், 250 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்ட், எஸ்ஓஎச்சி ப்யூவல் இன்ஜெக்டட் தரத்திலானது. இது, அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 26 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

இந்த எஞ்ஜின், புதிய ஆயில் குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான தொழில்நுட்பம் மென்மையான ஆக்சலேரேஷன், அதிக திறன் வெளியேற்றம், குறைந்த எரிபொருள் செலவு, நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த செலவிலான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றது.

வாடிக்கையாளர்களை கவர சுஸுகி மோட்டார்சைக்கிள் புதிய நிதியுதவி திட்டம்... எந்நேரத்திலும் எங்களை அணுகலாம்!

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலின், மோட்டோஜிபி எடிசனாக களமிறங்கியிருக்கும் இந்த பைக்கிற்கு ரூ. 1.71 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதே விலையைதான் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடல் பைக்குகளும் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
English summary
Suzuki Motorcycle Partner With HDB To Provide 24X7 Vehicle Finance for Customers. Read In Tamil.
Story first published: Sunday, August 25, 2019, 8:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X