இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா...

டாடா நிறுவனம், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை அடுத்து, அதன் பாதுகாப்பு நிறைந்த காரான நெக்ஸான் மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் நெக்ஸான் காரும் ஒன்று. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகின்றது. இதற்கு, இந்த கார் கடந்த ஆண்டில் நடைபெற்ற க்ராஷ் டெஸ்ட்டில் பெற்ற ரேடிங்கே முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், டாடா நெக்ஸான் கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் பெற்று, இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

சப்-4 மீட்டர் ரகத்திலான இந்த எஸ்யூவி மாடல் தற்போது சில அப்டேட்டுகளைப் பெற்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், நெக்ஸான் காரின் டிசைன் கணிசமாக மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதேபோன்று, கூடுதலாக சில சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

இந்த அதிரடி மாற்றத்தை, டாடா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் அளித்த கோரிக்கையை அடுத்து மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், வேரியண்டிற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், வேரியண்ட் வாரியாக டாட நெக்ஸான் கார்கள் பெற்றிருக்கும் அப்டேட்களைக் கீழே காணலாம்....

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

டாடா நெக்ஸானின் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் மாடலில் புதிய வசதியாக, பவர் அவுட்லெட்டுகள் அதன் பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பவர் அவுட்லெட் 12V திறன் கொண்டது. அதேபோன்று, டூர் ட்ரிம்மர்களின் நிறமும் மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு, சாட்டின் க்ரோம் நிறத்திலிருந்து ப்யானோ கருப்பு க்ளாஸி ப்னிஷ் கொடுக்கப்ட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய மாடல்களுக்கு புதிய ரூஃப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வேரியண்ட்களின் பின்பக்க ஏசி வெண்ட்டுகள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. இதனால், முந்தைய மாடலைக் காட்டிலும், தற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் இந்த வேரியண்டில் அதிகளவு குளிர்ச்சி வெளிப்படும். மேலும், அந்த ஏசி வெண்டின் காற்றடிக்கும் திசையை மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

அழகு மேம்படுத்தலாக எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்டி வேரியண்ட்களில், தொடுதிரை அல்லாத இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்ட்டுள்ளது. அதேபோன்று, இந்த காரின் அன்டெனாவினுடைய அளவு கூட்டப்பட்டுள்ளது. இதே மாற்றங்களுடன், எக்ஸ்இசட் வேரியண்டில் டேஸ்பேரின் மையபகுதி பேட் நிறம் அப்கிரேட் செய்யப்ட்டுள்ளது. அவ்வாறு, சில்வர் நிறத்திலிருந்து க்ளாஸ்ஸி ப்னிஸிங்குடன் கூடி வார்ன் க்ரே நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

இத்துடன், டாடா மோட்டார்ஸ் கியர் ஷிஃப்ட் லிவர் க்னாப் மற்றும் சென்ட்ரல் கன்சோலை புதிய வண்ணத்திற்கு மாற்றியமைத்துள்ளது. அவ்வாறு, முன்னதாக இருந்த சில்வர் நிறம் மாற்றப்பட்டு பியானோ க்ளாஸி நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த காரின் ஏசி கன்ட்ரோல் பேனலின் நிறம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஏசி க்னாப்பிற்கு பியானோ பிளாக் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களானது ஹை என்ட் வேரியண்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

இதைத்தொடர்ந்து, நெக்ஸான் மாடலை பிஎஸ்-6 தரத்திற்கு ட்யூன் அப் செய்யும் பணயிலும் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் அறிமுகமாகும் வரை, தற்போதைய பிஎஸ்-5 எஞ்ஜினே விற்பனையில் இருக்கும். மேலும், இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும்.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்த டாடா... மகிழ்ச்சியில் டாடாவின் ரசிகர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் தயாரிப்புகளின் சிலவற்றின் விலையை உயர்த்தி அறிவித்திருந்தது. அந்தவகையில், போல்ட், ஜெஸ்ட், ஹெக்ஸா மற்றும் நெக்ஸான் ஆகிய மாடல்களின் விலையை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தியது. அதேபோன்று, புகழ்வாய்ந்த ஹாரியர் மாடலின் விலையை ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தியது.

Most Read Articles
English summary
Tata Nexon Updated Based On Customers Feedback. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X