எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

பைக்கில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை, அதன் உரிமையாளரை வைத்தே போலீஸார் உடைக்க வைப்பதைப் போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவிலை காணலாம்.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இந்திய அரசு அண்மைக் காலங்களாக எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக கடும் கெடுபிடியை காட்டி வருகின்றது. இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு நிறைந்த புகையே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இந்த நச்சு புகையே புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசடைதலுக்கு மிக முக்கியமாக இருக்கின்றது. இதனால் உருவாகும் பின் விளைவுகளோ உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. ஆகையால், இவற்றை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இதேபோன்ற நடவடிக்கையை, தற்போது மாடிஃபிகேஷன் வாகனங்களுக்கு எதிராக போலீஸார் கையாள ஆரம்பித்துள்ளனர்.

வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. ஆனால், இது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

பொதுவாக பல வாகனங்களில் காணப்படும் மாடிஃபிகேஷன்களாக காணப்படுவது சைலென்சர் மற்றும் ஹாரன்கள் இருக்கின்றன. இவை அரசு விதித்துள்ள அளவைக் காட்டிலும் அதிகமான ஒலியை எழுப்பி ஒலி மாசுபாட்டை உருவாக்குகின்றன.

இத்துடன், இதர வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றன.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இதன்காரணமாகவே, உச்சநீதிமன்றம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள், இந்த வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதனடிப்படையில் போலீஸார், மாடிஃபைட் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

ஆஃப்டர் மார்க்கெட் பாகங்களாக விற்கப்படும் சைலென்சர் மற்றும் ஹாரன்கள் எப்படி கேடுவிளைவிக்கும் விதமாக இருக்கின்றதோ அதேபோன்று, கஸ்டமைஸ் செய்யப்பட்ட மின் விளக்குகளும் பேராபத்தை விளைவிப்பதாக உள்ளது. இவை, அதிக பிரகாசமான வெளிச்சத்தை பிரதிபலிப்பதுடன், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை குருடாக மாற்றிவிடுவிகிறது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இதனால், மற்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கி பெரும் சேதத்தைச் சந்திக்கின்றனர்.

ஆகையால், தற்போது சைலென்சர் மற்றும் ஹாரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதைப் போன்றே, இத்தகைய எல்இடி மின் விளக்குகளுக்கு எதிராக போலீஸார் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

பைக்கின் உரிமையாளரை வைத்தே போலீஸார் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி மின் விளக்கை உடைத்ததே இந்த வீடியோ அதிகம் வைரலாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த வீடியோ சற்று பழைய வீடியோ என கூறப்படுகின்றது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இச்சம்பவம், தமிழகத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அது எந்த மாவட்டம் என்பதில்தான் சந்தேகம் நிலவுகின்றது. இருப்பினும் வாகன பதிவெண்ணை வைத்து பார்க்கையில் அது கிரிஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

வீடியோவில், ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் ஆஃப்டர் மார்க்கெட் மின் விளக்கை காக்கி சட்டை உடையணிந்த ஓர் இளைஞர் கற்கலைக் கொண்டு உடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்தான் அந்த பைக்கின் உரிமையாளர் எனவும் கூறப்படுகின்றது.

பல முறை முயற்சி செய்தும் அந்த மின் விளக்கு உடையாத காரணத்தால், காவல் அதிகாரி, அவரை கூர்மையான கல்லைக் கொண்டு உடைக்குமாறு அறிவுறுத்துகிறார். அதையும், புன்னகையுடன் அந்த ஹீரோ ஐ ஸ்மார்ட் பைக்கின் உரிமையாளர் உடைக்கின்றார். சுமார், 2 முதல் 3 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற போராட்டத்திற்குபின் அந்த மின் விளக்குகள் உடைக்கப்படுகின்றன.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

இவ்வாறு, போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்குவது முதல்முறையல்ல முன்னதாகக்கூட, கர்நாடகா மாநில போலீஸார் இதேபோன்று, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக வேட்டையை நடத்தினர். அதில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சைலென்சர்களை சாலையில் வைத்து, ரோட் ரோலர் வாகனத்தின் உதவியுடன் அழித்தனர்.

எல்இடி மின் விளக்கை பைக்கின் உரிமையாளரை வைத்தே உடைக்க வைத்த தமிழக போலீஸ்... எதற்கு தெரியுமா...?

மேலும், மிஞ்சியிருந்த சைலென்சரை வைத்து, வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல் பதாகையை தயார் செய்திருந்தனர். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை, முறைகேடாக வாகங்களைப் பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: RushLane/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
TN Police Force To Break Illegal LED Light With Hero Splendor Owner. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X