இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10, 150 சிசி பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10, 150 சிசி செக்மெண்ட் மோட்டார் சைக்கிள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பஜாஜ் பல்சர் 150 முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 83,228 பல்சர் 150 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 63,673 பல்சர் 150 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் பஜாஜ் பல்சர் 150 மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்த பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 42,965 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 35,358 அப்பாச்சி சீரிஸ் பைக்குகளை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

மூன்றாவது இடத்தை யமஹா எஃப்இஸட் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 18,362 யமஹா எஃப்இஸட் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது 4 சதவீத வீழ்ச்சியாகும். ஏனெனில் அதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் 19,060 எஃப்இஸட் பைக்குகளை யமஹா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

நான்காவது இடத்தை பிடித்துள்ள ஹோண்டா சிபி யூனிகார்ன், 25 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 11,062 சிபி யூனிகார்ன் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் 14,741 சிபி யூனிகார்ன் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை யமஹா ஆர்15 பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 9,503 ஆர்15 மோட்டார் சைக்கிள்களை யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8,939 ஆர்15 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் யமஹா ஆர்15 மோட்டார் சைக்கிள் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை புது வரவான யமஹா எம்டி-15 பிடித்து அசத்தியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எம்டி-15 பைக்கை யமஹா நிறுவனம் கடந்த மார்ச் மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவான வசதிகளுக்கு அதிக விலை என்பது போன்ற குறைகளையும் கடந்து, மார்ச் மாதத்தில் 5,203 எம்டி-15 பைக்குகளை விற்பனை செய்து யமஹா நிறுவனம் அசத்தியுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

ஏழாவது இடம் யமஹா எஸ்இஸட் மோட்டார் சைக்கிளுக்கு கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 2,872 எஸ்இஸட் மோட்டார் சைக்கிள்களை யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,304 எஸ்இஸட் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதன் மூலம் யமஹா எஸ்இஸட் மோட்டார் சைக்கிள் 25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்த பட்டியலில் 8, 9 மற்றும் 10வது இடங்களை பிடித்துள்ள மூன்று மோட்டார் சைக்கிள்களுமே வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன. 8வது இடம் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார் சைக்கிளுக்கு செல்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 2,446 ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,002 சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார் சைக்கிள்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இது 19 சதவீத சரிவாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

9வது இடத்தை ஹோண்டா எக்ஸ் பிளேடு பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா எக்ஸ் பிளேடு மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 1,853 மட்டுமே. ஆனால் கடந்த பிப்ரவரியில் 2,721 எக்ஸ் பிளேடு பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இது 32 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை சுஸுகி ஜிக்ஸெர் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 460 யூனிட் ஜிக்ஸெர் பைக்குகளை மட்டுமே சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 584 ஆக இருந்தது. இது 21 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Top 10 150cc Bikes In March 2019 In India. Read in Tamil
Story first published: Tuesday, April 23, 2019, 21:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X