2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

2019ஆம் ஆண்டு முடிவடைந்து 2020 துவங்க இன்னும் சில நாட்கள் தான் மீதம் உள்ளது. இந்த 2019ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் பல ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்கள் களமிறங்கியுள்ளன.

கிட்டத்தட்ட 1 வருடமாக ஆட்டோமொபைலில் மந்த நிலை நிலவி வருவதால், எந்த நிறுவனமும் அதிக அளவில் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரவில்லை. அவ்வாறு அறிமுகப்படுத்த சில மோட்டார்சைக்கிள்களில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த 10 ப்ரீமியம் பைக்குகளை செய்தியில் காணலாம்.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

10. டுகாட்டி டையாவெல் 1260எஸ்

டையாவெல் 1260எஸ் பைக் டுகாட்டி நிறுவனத்தால் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலாகும். க்ரூஸர், ஸ்போர்ட்ஸ், மஸ்குலர் ஸ்ட்ரீட் என மூன்று விதமான பைக்குகளின் டிசைனிற்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட இந்த பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.19.25 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1,262சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 155 பிஎச்பி பவரையும் 129 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் தொகுப்பு, கீ-லெஸ் இக்னிஷன், மல்டிமீடியா சிஸ்டம், அகலமான இருக்கைகள், கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், பவர் லாஞ்ச் மற்றும் விரைவான ஷிப்டர் போன்றவற்றை இந்த பைக் சிறப்பம்சங்களாக பெற்றுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

9. ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200எக்ஸ்சி

ஆப்-ரோட்டிற்கு மிகவும் ஏற்ற விதத்தில் சக்தி வாய்ந்த என்ஜின் அமைப்புடன் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் தான் ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 1200எக்ஸ்சி. ரூ.10.73 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கில் 1200சிசி என்ஜினை ட்ரையம்ப் நிறுவனம் பொருத்தியுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இந்த என்ஜின் 88 பிஎச்பி பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடியது. இந்த பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரைட்-பை-வயர் மற்றும் இம்மொபிளிசர் போன்ற தொழிற்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

8. இந்தியன் எஃப்டிஆர் 1200 எஸ்

ரு.15.99 லட்சத்தில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து ப்ரீமியம் பைக்காக 2019ல் எஃப்டிஆர் 1200எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. முற்றிலும் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் ஸ்டைலில் வெளியிடப்பட்ட இந்த பைக்கில் 1203சிசி என்ஜின் வழங்கப்பட்டிருந்தது. இந்த என்ஜினானது அதிகப்பட்சமாக 119 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இந்த பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பைக் திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்டி-லாக் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் மூன்று மோட்களில் ரைடிங் போன்ற அம்சங்களை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியிருந்தது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

7. ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின்

ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் வாகனத்தை விட சக்தி வாய்ந்த மற்றும் வேகமான மோட்டார்சைக்கிளை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டது தான் ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின். ரூ.9.46 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக்கில் 96 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 1200சிசி என்ஜினை ட்ரையம்ப் நிறுவனம் பொருத்தியுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், என்ஜின் இம்மொபிளிசர், மல்டிபிள் ரைடிங் மோட்ஸ், ஹாலோஜன் ஹெட்லைட்ஸ், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எல்இடி விளக்குகளில் டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்ஸ் மற்றும் டெயில்லைட் உள்ளிட்டவை இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களாகும்.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

6. பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர்

மிகவும் சவுகரியமான பயணத்திற்கு சக்தி வாய்ந்த என்ஜின் தரத்துடன் பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் பைக் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 999சிசி என்ஜினை கொண்ட இந்த பைக் அதிகப்பட்சமாக 200.8 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் விலை இந்திய சந்தையில் ரூ.18.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் பைக்கானது புதிய ஃப்ளக்ஸ் ஃப்ரேம், இலகுவான ஸ்டேரிங் மற்றும் என்ஜின் மௌண்ட்ஸ், முழு-கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 6-ஆக்ஸிஸ் ஐஎம்யூ, வீலிங் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உரிய ஷிஃப்ட்காம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

5. கவாஸாகி இசட்900 பிஎஸ்6

பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட 948சிசி என்ஜினுடன் கவாஸாகி நிறுவனத்தில் இருந்து இந்தாண்டு புதிய இசட்900 பைக் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் என்ஜின் 123.3 பிஎச்பி மற்றும் 98.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தவல்லது. ரூ.7.70 லட்ச விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கில் கவாஸாகி நிறுவனம் அசிஸ்ட் தொழிற்நுட்பத்துடன் கூடிய ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் ஏபிஎஸ் போன்றவற்றை வழங்கியுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இதன் பிரிவில் உள்ள மற்ற பைக்குகளை போல் எலக்ட்ரானிக் பாகங்களை இந்த பைக் அதிகமாக கொண்டிருக்காவிட்டாலும், இதன் குறைவான விலை வாடிக்கையாளர்களின் கவனத்தை இழுத்தது. கவாஸாகி இசட்900 பைக் க்ரே/ சிவப்பு, கருப்பு/சிவப்பு மற்றும் முழுவதும் கருப்பு என 3 விதமான நிற கலவைகளில் டீலர்ஷிப்களிடம் கிடைக்கிறது. மேலும் இந்த பைக் தான் இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ப்ரீமியம் பைக்காகும்.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

4. பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ்

இந்திய வாடிக்கையாளர்கள் மெதுவாக அட்வென்ஜர் டூரிங் வகை பைக்குகளுக்கு நகர்ந்து வருவதை அறிந்த பிஎம்டபிள்யூ, அவர்களை கவர அறிமுகப்படுத்திய பைக் தான் பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ். ரூ.13.84 லட்ச விலையுடன் நிர்ணயிக்கப்பட்ட இந்த பைக்கில் 853சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 94 பிஎச்பி மற்றும் 92 என்எம் டார்க் திறன் ஆகும்.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இந்த பைக், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர், ரைட்-பை-வயர், செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் செட் அப் மற்றும் மல்டிபிள் ரைடிங் மோட்ஸ் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

3. கேடிஎம் 790 ட்யூக்

காம்பெக்ட், எடை குறைந்த மற்றும் சுறுசுறுப்பான 790 ட்யூக் பைக்கை 2019ன் துவக்கத்தில் கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. 799சிசி என்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக் 105 பிஎச்பி பவர் மற்றும் 86 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.64 லட்ச ஆரம்ப விலையுடன் இந்த 790 ட்யூக் விற்பனை செய்யப்படுகிறது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இந்த பைக்கில் க்ரோம்-மாலிப்டினம் குழாய் ஃப்ரேம், முழுவதும் டிஜிட்டலாக மாற்றப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூல்-சேனல் ஏபிஎஸ், பல மோட்களில் பைக்கை இயக்கும் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் லாஞ்ச் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை கேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

2. கவாஸாகி இசட்650 பிஎஸ்6

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 649சிசி என்ஜினுடன் சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்ட கவாஸாகி இசட்650 பைக் அதிகப்பட்சமாக 67.3 பிஎச்பி பவர் மற்றும் 65.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ரூ.6.25 லட்சத்தில் இருந்து ரூ.6.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பிஎஸ்6 பைக்கானது கூர்மையான டிசைன் அமைப்புடன், ரீ-டிசைன் ஹெட்லைட்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக 4.3 இன்ச் டிஎஃப்டி திரையை பெற்றுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

மேலும் இந்த பைக்கில் ஸ்மார்ட் போனுடன் இணைப்பதற்காக ப்ளூடூத் வசதியையும் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இதனுடன் இந்நிறுவனத்தின் ரைடியோலாஜி ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனும் ஸ்மார்ட்போன் இணைப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

1. பெனெல்லி லியோன்சினோ 500/250

இத்தாலிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான பெனெல்லியில் இருந்து 2019ல் அறிமுகப்படுத்த ப்ரீமியம் பைக்குகள் தான் லியோன்சினோ 500 மற்றும் லியோன்சினோ 250. ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைலில் தயாரிக்கப்பட்ட இந்த இரு பைக்குகளும் முறையே ரூ.5.44 லட்சம் மற்றும் ரூ.2.82 லட்ச விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 500சிசி மற்றும் 250சிசி என்ஜின்களை பெற்றுள்ள இவை 64பிஎச்பி/46என்எம் மற்றும் 25பிஎச்பி/21என்எம் டார்க் திறன்களை முறையே வெளிப்படுத்துகின்றன.

2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான 10 ப்ரீமியம் பைக்குகள் இவை தான்...

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ப்ரீமியம் மோட்டார்சைக்கிளை தவிர்த்து மேலும் சில ப்ரீமியம் பைக்குகளும் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. அடுத்த ஆண்டில் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளதால், 2020ல் அதிக ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் களமிறங்கவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 10 Premium Motorcycles Launched In 2019: The S1000RR, The Diavel 1260S And More
Story first published: Monday, December 30, 2019, 20:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X