விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

இருசக்கர வாகன விற்பனை சந்தையில் 300சிசி வரை உள்ள பைக்குகளை பஜாஜ், சுஸுகி, டிவிஎஸ், ஹீரோ போன்ற முன்னனி நிறுவனங்கள் களமிறக்கவுள்ளன. விரைவில் விற்பனையில் களமிறங்கவுள்ள 300சிசி வரை உள்ள சக்தி வாய்ந்த பைக்குகள் குறித்த விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

மக்களின் அத்யாவசிய தேவையாக தற்போது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் மாரி விட்டன. நவீன வளர்ச்சிக்கு ஏற்ப முன்னனி பைக் நிறுவனங்கள் பைக்குகளை வடிவமைத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அதிக என்ஜின் சக்தி கொண்ட பைக்குகளை அறிமுகம் செய்வதில் பைக் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பஜாஜ், சுஸுகி, டிவிஎஸ், ஹீரோ போன்ற முன்னனி நிறுவனங்கள் 300சிசி வரை உள்ள பைக்குகளை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

பஜாஜ் பல்சர் 250:

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல்கள் ஆரம்பம் முதலே விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. ஒவ்வொரு வேரியன்ட்களில் வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட என்ஜின் மூலமாக வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது. மேலும் பல இளைஞர்களுக்கு பிடித்த பிராண்டாக பஜாஜ் மாறியுள்ளது. அவ்வகையில் பஜாஜ் நிறுவனம் புதிய பஜாஜ் பல்சர் 250 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

பஜாஜ் நிறுவனத்தின் டோமினார் 400 விற்பனையில் தோல்வி அடைந்ததால் அந்நிறுவனம் மக்களின் வரவேற்பை பெற்ற பல்சர் மாடலில் அடுத்த வேரியன்டை அறிமுகம் செய்கிறது. இதில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிஎஸ்-6 என்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யமஹா எஃப்இசட்25 மற்றும் கேடிஎம் டியூக் 250 பைக்குகளுக்கு போட்டியாக பல்சர் 250 அடுத்த ஆண்டு களம் இறங்குகிறது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

டிவிஎஸ் ஸெப்லின்:

டிவிஎஸ் நிறுவனத்தின் க்ரூஸர் ரக டிவிஎஸ் ஸெப்லின் 200 கான்செப்ட் கடந்த 2018ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. டிவிஎஸ் ஸெப்லின் பைக் 220சிசி என்ஜின் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டருடன் இணைந்து செயல்படும் தொழில்நுட்ப திறன் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

ஸெப்லின் 200 பைக் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்கப்படுகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் க்ரூஸர் பைக் ஸெப்லின் 200 என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி என இரு பைக்குகளை வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில் எக்ஸ்பல்ஸ் 200 பைக் 199சிசி என்ஜினுடன் அட்வென்ஜர் பைக் ஸ்டைலில் வருகிறது. மேலும் இதில் ஆஃப் ரோடுக்கு ஏற்ற ஸ்போக் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. அட்வென்ஜர் பைக்கினை விரும்புவோர்க்கு எக்ஸ்பல்ஸ் 200 சிறந்த தேர்வாக இருக்கும்.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

எக்ஸ்பல்ஸ் 200டி 199சிசி என்ஜினுடன் 200 வேரியண்டில் முற்றிலும் மாறுபட்டு டூரிங் வெர்சனாக வரவுள்ளது. இருப்பினும் ஸ்டைல் மற்றும் சஸ்பென்ஷனில் மட்டும் 200டி மாறுபடுகிறது. மேலும் இதில் ஸ்போக் வீல்களுக்கு பதிலாக அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி என்ஜின்கள் 18.4 பிஎச்பி மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

சுஸுகி ஜிக்ஸெர் 250:

சுஸுகி நிறுவனம் தனது புதிய ஜிக்ஸெர் 250 பைக்கினை வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஜிக்ஸெர் 150 பைக்கிற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து சுஸுகி நிறுவனம் ஜிக்ஸெர் 250 பைக்கினை அறிமுகம் செய்கிறது. சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த 300சிசி பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்?

இதன் சக்தி வாய்ந்த 250சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் 250 பைக் கேடிஎம் 200 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.

Most Read Articles
English summary
top upcoming bikes under 300cc: read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X