நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட்

கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நிலவி வருகின்ற பொருளாதார மந்த நிலையால் பல முன்னணி நிறுவனங்களின் கார், மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கடந்த மாதத்தில் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெரிய முன்னேற்றம் தென்படுகிறது.

வெளியாகியுள்ள சிறப்பாக விற்பனையான டாப்-10 ஸ்கூட்டர்களின் லிஸ்ட்டை பார்க்கும்போது, அதில் சில ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரை விடவும் ஒரே ஒரு ஸ்கூட்டரை தவிர மற்ற அனைத்தும் 2019 ஆகஸ்ட்டை விடவும் கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே விற்பனையாகியுள்ளன. சில நிறுவனங்கள் தங்களது ஸ்கூட்டர்களுக்கு கடந்த மாதத்தில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது. அதுதான் இத்தகைய முன்னேற்றத்திற்கு காரணம்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

இந்த லிஸ்ட்டில் 2,48,939 யூனிட்கள் 2019 செப்டம்பரில் விற்பனையாகி ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது. 2,84,809 யூனிட்கள் விற்பனையான 2018 செப்டம்பரை விட இந்த எண்ணிக்கை 12.59 சதவீதம் குறைவுதான். என்றாலும் ஆகஸ்ட்டில் இருந்து 6.26 சதவீத முன்னேற்றத்துடன் ஹோண்டா ஆக்டிவா தான் தொடர்ச்சியாக இந்த செப்டம்பரிலும் முதலிடத்தை தொடர்ந்து வருகிறது. மேலும் கடந்த மாதத்தில் இந்தியாவிலேயே முதல் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டராக இந்த ஆக்டிவா அப்டேட் செய்யப்பட்டதும் இந்த தொடர் முதலிடத்திற்கு காரணம்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஆக்டிவாவை விட மிக பெரிய விற்பனை யூனிட் வித்தியாசத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 69,049 யூனிட்களுடன் உள்ளது. 2018 செப்டம்பரை விட இந்த எண்ணிக்கை 23.87 சதவீதம் குறைவு. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 19.36 சதவீதம் அதிகமாகும்.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

மூன்றாவது இடத்தை சுசுகி மோட்டார்ஸின் அக்சஸ் மாடல் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஸ்கூட்டர்களுள் ஒன்றாக இருக்கும் அக்சஸ் 2018 செப்டம்பரை விட 6.88 சதவீதம் அதிகமாக 50,162 யூனிட் விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளது. அதேபோல் 2019 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 3.12% இந்த ஸ்கூட்டர் விற்பனையில் முன்னேற்றத்தையே பெற்றுள்ளது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

நகர இளைஞர்களின் விருப்பமான ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா டியோ 2018 செப்டம்பரை விட 12.71% விற்பனை வீழ்ச்சி மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 2.72 சதவீதம் விற்பனையில் முன்னேற்றத்தை அடைந்து இந்த செப்டம்பர் மாதத்தில் 38,752 யூனிட் விற்பனையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் டிவிஎஸ் என்டார்க் (27,814), ஹீரோ ப்ளேசர் (20,424), ஹீரோ மேஸ்ட்ரோ (14,191), யமஹா ஃபேஸினோ (13,124), யமஹா ராய் (10,208) மற்றும் ஹீரோ டெஸ்டினி (9,982) போன்ற ஸ்கூட்டர்கள் உள்ளன. இதில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் இந்த லிஸ்ட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிகப்பட்ச விற்பனை வீழ்ச்சியாக சுமார் 62.02 சதவீதத்தை பதிவு செய்துள்ளது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

சுசுகி அக்ஸஸ் ஸ்கூட்டரை போல டிவிஎஸ் என்டார்க் மற்றும் ஹீரோ ப்ளேசர் ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரை விட முறையே 33.59, 23.21 சதவீதம் அதிகமாக விற்பனை முன்னேற்றங்களை பெற்றுள்ளது. அதேசமயம் யமஹா ஃபேஸினோ மாடல் ஸ்கூட்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 10.43 சதவீத விற்பனை வீழ்ச்சியை கடந்த செப்டம்பர் மாதத்தில் பெற்றுள்ளது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு முன்னேற்றம் காணும் ஸ்கூட்டர் விற்பனை... செப்டம்பர் மாதத்தின் டாப்-10 லிஸ்ட் இதோ...

இந்த லிஸ்ட்டின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட்டை காட்டிலும் பெரும்பான்மையான ஸ்கூட்டர்கள் விற்பனையில் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஸ்கூட்டர்களுக்கு தீபாவளி விழாகாலத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளதால் இந்த ஸ்கூட்டர்களின் அக்டோபர் மாதத்திற்கான விற்பனை அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Source:RushLane

Most Read Articles
மேலும்... #sales
English summary
Top-Selling Scooters In India For September 2019: Honda Activa Continues To Maintain Lead In Segment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X