புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் வருகை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

கடந்த 2016ம் ஆண்டு டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்த இந்த பைக்கின் டெலிவிரி 2017ம் ஆண்டு துவங்கப்படும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

ஆனால், ஆண்டு மூன்றாகிவிட்ட நிலையில், டார்க் டி6எக்ஸ் பைக்கின் டெலிவிரி துவங்கப்படவில்லை. இந்த நிலையில், டார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கபில் ஷெல்கே எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

அதில்," சந்தையில் மிக சீரான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்பட இருக்கிறோம். ஆலையில் உற்பத்தி துவங்கியவுடன் எங்களது விற்பனை மையங்கள் வாயிலாக பைக்குகளை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்," என்று கூறி இருக்கிறார்.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

எக்கனாமிக் டைம்ஸ் இதழ் செய்தியின்படி, இந்த ஆண்டு இறுதியில் டார்க் டி6எக்ஸ் பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவிக்கிறது. முதல்கட்டமாக பெங்களூர், புனே நகரங்களில் டார்க் டி6எக்ஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கான 90 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே பெறப்பட இருக்கிறது. லித்தியம் அயான் பேட்டரி மட்டும் தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து சப்ளை பெறப்படுவதாக டார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. ஆனால், இதில், 90 சதவீத உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், மானியம் பெற தகுதியான மாடலாக இருக்கும்.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

டார்க் டி6எக்ஸ் பைக் தாமதமானாலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய டார்க் டி6எக்ஸ் எலெக்ட்ரிக் பைக்கின் வருகை விபரம்!

இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். குயிக் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் இந்த பைக்கின் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு மணிநேரம் பிடிக்கும்.

Most Read Articles
English summary
According to reports, Tork is planning to launch T6X electric bike In India by end of this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X