அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

டிரையம்ப் நிறுவனம், அதன் பிரபல டேடோனா 765 பைக்கின் உற்பத்தியை உறுதி செய்துள்ளது. இந்த பைக்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

பிரிட்டிஷ் நாட்டைச்சேர்ந்த டிரையம்ப் நிறுவனம், அதன் டேடோனா 765 பைக்கை உலகளவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், டேடோனா 765 பைக்கை அந்நிறுவனம், வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த செய்தியை பைக்வேல் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

டேடோனா வரிசையில் விற்பனையாகும் அனைத்து மாடல் மோட்டார்சைக்கிளுக்கும் உலகளவில் பெரிய வரவேற்பு நிலவி வருகின்றது. அந்தவகையிலேயே, இந்த நடுத்தர எடை கொண்ட டேடோனா 765 மாடலுக்கும் அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

டிரையம்ப் நிறுவனம் இந்த பைக்கை, ஐரோப்பாவின் புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக, உற்பத்தி செய்யாமல் காத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

இந்நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப, பைக்கை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஆகையால், அதனை கட்டமைப்பதில் டிரையம்ப் நிறுவனம் அதிதீவிர முயற்சியைக் காட்டிவருகின்றது.

அதனடிப்படையிலேயே உலகம் முழுவதிலும் இந்த பைக் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

அதேசமயம், இந்த பைக்கின் ரசிகர்கள், அதன் வரவை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அறிமுகம்குறித்த தகவலை வெளியிட்டு, அவர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது டிரையம்ப் நிறுவனம்.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய டேடோனா பைக்கின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக, அதன் எஞ்ஜின் இருக்கின்றது. இந்த எஞ்ஜின் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்எஸ் மாடலில் இருந்து பெறப்பட்டதாக இருக்கின்றது. அது, மூன்று சிலிண்டர் அமைப்பைக் கொண்ட, 121 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

இத்துடன், இந்த எஞ்ஜின் ட்ராக் மோட் உள்ளிட்ட ஐந்து ரைடிங் மோட்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதேபோன்று, நவீன தொழில்நுட்ப அம்சமாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், மோட்டோ2-வின் ஸ்டார்ட்-அப் வரவேற்பு காட்சி திரையில் ஒளிப்பரப்பாகும் வகையில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

இந்த பைக்கின் உற்பத்தியானது, முதலில் டேடோனா மோட்டோ2 லிமிடெட் எடிசன் என்ற ரகத்திலேயே தயார் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்தே ஸ்டாண்டர்டு மாடலாக இந்த பைக் உற்பத்திச் செய்யப்பட உள்ளது. அதேசமயம், இந்த பைக் இரண்டு வெர்ஷன்களில் தயார் செய்யப்பட உள்ளது.

அதில், ஒன்று ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்காகவும், மற்றொன்று அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட சந்தைகளுக்காக தயார் செய்யப்பட உள்ளது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

டிரையம்ப் டேடோனா 765 மோட்டோ2 லிமிடெட் எடிசனில் வெறும் 765 யூனிட்கள் மட்டுமே தயார் செய்யப்பட உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள்களின் பிரத்யேக வண்ணத் தொகுப்பிற்காக மோனோகுரோம் யூனியன் ஜேக் நிறம் கொடுக்கப்பட உள்ளது.

இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக லிமிடெட் எடிசனின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் பிரத்யேகமாக, பில்லட் அலுமினியம் டாப் கிளாம்ப் கொடுக்கப்பட உள்ளது. இது, ஒவ்வொரு பைக்கின் உற்பத்தி எண்ணையும் தாங்கும் வகையில் இருக்கும்.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

மேலும், இந்த டேடோனா மோட்டோ 765 லிமிடெட் எடிசனில், டாப் ஸ்பெக் மாடல்களில் காணப்படும் சிறப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அந்தவகையில், பைக்கரின் பாதுகாப்பிற்கான சிறப்பு வசதியாக பிரெம்போ பிரேக் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், சிறப்பான சஸ்பென்ஷனுக்காக ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் இணைக்கப்பட உள்ளது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

இந்த லிமிடெட் எடிசன் பைக்கை டிரையம்ப் நிறுவனம், இங்கிலாந்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் மோட்டோ ஜிபி போட்டியின் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அடடா என்ன ஸ்டைலு... விரைவில் உலகையே கலக்க களமிறங்கும் டிரையம்ப்பின் சூப்பர் பைக் இதுதான்...

இதைத்தொடர்ந்தே, இந்தியாவிற்கும் அந்நிறுவனம், சில யூனிட் டேடோனா 765 மோட்டோ2 லிமிடெட் எடிசனை அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றும் இதுவரை வெளியாகிவில்லை. அதேபோன்று, இந்த மோட்டார்சைக்களில் வருகின்ற இஐசிஎம்ஏ மிலான் வாகன கண்காட்சியிலும் காட்சிப்படுத்தலாம் என தகவல் தெரவிக்கின்றன.

Most Read Articles
English summary
Triumph Daytona 765 Launch In 2020. Read In Tamil.
Story first published: Thursday, July 25, 2019, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X