டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப், அதன் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தின்போது வழங்கவிருக்கும் பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விபரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்து பிஎஸ்6 மாசு உமிழ்வு கொண்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை கார்அன்ட்பைக் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

டிரையம் நிறுவனம் பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் 14 வகையான மோட்டார்சைக்கிள்களை இதுவரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200 என்னும் மாடல் கூடிய விரைவில் இணைய உள்ளது. டிரையம்ப் நிறுவனம் நிலுவையில் இருக்கும் மோட்டார்சைக்கிள்களை பிஎஸ் தரத்திற்கு உயர்த்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றது.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரையம்ப் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஃபரூக் கூறியதாவது, "டிரையம்ப் நிறுவனம் தயாரித்து வரும் அனைத்து வாகனங்களிலும் பிஎஸ்6 எஞ்ஜின்களைப் பொருத்துவதற்கு கால இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஒரு கொள்கையைக் கொண்டு இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில், நாங்களும் கணிசமான கால அவகாசத்தை எடுத்துள்ளோம். அவ்வாறு, நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்6 தரம் கொண்ட எஞ்ஜின்களை சந்தையில் அறிமுகம் செய்வோம். இதுவே எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தரும் கிஃடாக இருக்கும்" என்றார்.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

மேலும் பேசி அவர், "நிலுவையில் இருக்கும் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் கலைக்க இருக்கிறோம். இதன் பின்னர், கலைக்கப்பட்ட அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் பிஎஸ்6 தரத்திற்கு உயர்த்துவதற்கா முயற்சியை மேற்கொள்ளுவேம். இந்த பணியினால், விற்பனைக்கு மோட்டார்சைக்கிள் இல்லை என்ற சூழலை ஏற்படுத்தாமல் இருக்க சில மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு விட்டுவைக்கப்படும்" என தெரிவித்தார்.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ்5 எஞ்ஜின்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. மேலும், அதற்கு பெருமளவிலான முதலீடு தேவைப்படும். இதன்காரணமாகவே பல்வேறு நிறுவனங்கள், இந்த மாற்றத்தைக் கொண்டு வர நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

ஆனால், இதுபோன்ற சூழ்நிலையை டிரையம்ப் நிறுவனம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அந்தவகையில், இந்த நிறுவனம் அனைத்து மோட்டார்சைக்கிள்களையும் பிஎஸ்6 தரத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் 100 சதவீதம் தயார் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

டிரையம்ப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு இதுதான்: என்ன தெரியுமா...?

மேலும், இந்த வருடத்தின் மத்தியில் தொடர்ச்சியாக ஐந்து புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டது. அதன்படி, அண்மையில் நான்கு மாடல்களை டிரையம்ப் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அவ்வாறு, 2019 ஸ்ட்ரீட் ட்வின், ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர், டைகர் எக்ஸ்சிஏ மற்றும் ஸ்பீட் ட்வின் ஆகிய நான்கு மாடல் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டன. இத்துடன், ஐந்தாவது மாடலாக ஸ்கிராம்ப்ளர் 1200 மாடலும் கூடிய விரைவில் அறிமுகமாக இருக்கின்றது.

Most Read Articles
English summary
Triumph Launching BS-VI Compliant Motorcycles In December — A Cleaner Christmas Gift!. Read In Tamil.
Story first published: Sunday, April 28, 2019, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X