இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

பிரீமியம் ரக மோட்டார்சைக்கிளை விற்பனைச் செய்து வரும் டிரையம்ப் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவில் விற்பனைச் செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளை அப்கிரேட் செய்வதற்காக திருப்பிக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

பிரிட்டிஷை மையமாகக் கொண்டு இயங்கும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களுக்கு தனி அந்தஸ்து உலகம் முழுவதும் நிலவி வருகிறது.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

டிரையம்ப் நிறுவனம், சமூகத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே மோட்டார்சைக்கிள்களை விற்பனைச் செய்வதாக முன்னதாக கருத்துகள் பரவ ஆரம்பித்தன. அதற்கேற்ப இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு, நாகரீகமற்ற முறையில் உடையணிந்து 12 பேருக்கு மோட்டார்சைக்கிளை விற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த நிறுவனத்தின்மீது சில கருத்துகள் பரவலாக இருந்து வருகின்றது.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இப்படிப்பட்ட டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம்தான், கடந்த ஆண்டின் அரைநிதியாண்டில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக சலுகைகளை அள்ளி வழங்கியது. மேலும், சமீபத்தில் தனது புத்தம் புதிய இரு மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்தது. அதன்படி, ஸ்ட்ரீட் ட்வின் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில், இந்தியாவில் சமீபத்தில் விற்பனையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களை அப்கிரேட் செய்வதற்காக திரும்ப அழைத்துள்ளது. அந்த வகையில், டிரையம்பின் ஸ்ட்ரீட் ட்வின், ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர், போனிவில் டி100 மற்றும் போனிவில் டி120 ஆகிய மாடல் மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் திரும்பக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

மேலும், அழைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் இனிடிகேட்டர், மெயின் பீம் மால்பங்க்ஷன் மற்றும் எடை குறைப்பு உள்ளிட்ட அப்கிரேட்டுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, எஞ்ஜின் சக்தியைக் கூட்டும் நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. அதன்படி, கிளட்ச் கேபிள் மற்றும் பிளேட் உள்ளிட்டவை சீரமைக்கப்பட உள்ளது.

இலவச அப்கிரேடுக்கு அழைப்பு விடுக்கும் டிரையம்ப்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்த சர்வீஸ் முழுவதும் இலவசமாக டிரையம்ப் வாடிக்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட இருப்பதாக டிரையம்ப் இந்திய டீலர்கள் அறிவித்துள்ளனர். ஆகையால், டிரையம்பின்ஸ்ட்ரீட் ட்வின், ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர், போனிவில் டி100 மற்றும் போனிவில் டி120 ஆகிய மாடல் மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் இருக்கும் சர்வீஸ் சென்டரை அணுக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Triumph Recalls 1,000 MotorCycles For Minor Upgrades. Read In Tamil.
Story first published: Friday, March 29, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X